Salaar Box Office: ஜெயிலர், லியோ வசூலை நெருங்கிய சலார்... மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் பிரபாஸ்

சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் கடந்த மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான சலார், தமிழ் ரசிகர்களிடம் சுத்தமாக எடுபடவில்லை. அதேநேரம் டோலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள சலார், 10 நாட்கள் முடிவில் ஜெயிலர், லியோ வசூலை நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் சலார்

பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள சலார், டிசம்பர் 22ம் தேதி ரிலீஸானது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பில் இருந்த சலார், பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், சலார் திரைப்படமும் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர்.

 Salaar Box Office: Prabhas starrer Salaar crossed Rs 600 crore collection in ten days

ஆனால், கொடுத்த ஹைப்பில் பாதி கூட இல்லாமல் மொக்கையான படமாக வந்துள்ளதாக சலாரை கோலிவுட் ரசிகர்கள் விமர்சித்திருந்தனர். பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன் என வெயிட்டான ஸ்டார் காஸ்ட்டிங் இருந்தும், மேக்கிங், கதை சொன்ன விதம், கலர் டோன் என அனைத்துமே கேஜிஎஃப் படத்தின் அப்டேட் வெர்ஷன் என ட்ரோல் செய்யப்பட்டன. இதனால் சலார் படத்துக்கு தமிழில் எதிர்பார்த்த சக்சஸ் கிடைக்கவில்லை என கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் இந்தியா முழுவதும் இதுவரை 600 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது சலார். இது ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ படங்களின் வசூலை நெருங்கிவிட்டது. முதல் நாளில் 178 கோடி ரூபாய் வசூலித்த சலார், இரண்டாவது நாளில் 117 கோடி வரை கலெக்‌ஷன் செய்தது. ஷாருக்கானின் பதான், ஜவான், விஜய்யின் லியோ படங்கள் தான் 2023ல் முதல் மூன்று நாட்களில் அதிகம் வசூலித்த படங்கள் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறி வந்தன. அதனை சலார் திரைப்படம் பிரேக் செய்திருந்தது.

தொடர்ந்து வசூலில் சரிவை சந்தித்த சலார், மூன்றாவது நாளில் 95, நான்காவது நாளில் 77, 5வது நாளில் 40 கோடி வரை வசூல் செய்தது. அதன் தொடர்ச்சியாக 6வது நாளில் 31 கோடியும், 7வது நாளில் 20.78 கோடியும், 8வது நாளில் 14 கோடியும் வசூலித்திருந்தது. மேலும், ஒன்பதாவது நாளில் 21.45 கோடி ரூபாயும், பத்தாவது நாளில் 23 கோடியும் கலெக்‌ஷன் செய்துள்ளது. அதன்படி, முதல் 10 நாட்களில் 601 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளது சலார்.

ஷாருக்கானின் பதான், ஜவான் வரிசையில் சலார் கலெக்‌ஷன் ஆயிரம் கோடி வசூலை கடப்பது சந்தேகமே என சொல்லப்படுகிறது. பாகுபலிக்குப் பின்னர் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் படங்கள் பிரபாஸுக்கு கை கொடுக்கவில்லை. அந்த வரிசையில் தற்போது சலார் படம் இடம்பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X