Salaar Box Office: 4 நாளில் ஜெயிலரை நாக்கவுட் செய்த பிரபாஸ்!.. சலார் வசூல் இத்தனை கோடியா?
சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் 4 நாட்களில் ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு பாலிவுட்டுக்கு அடுத்து அதிக வசூல் ஈட்டியது கோலிவுட் தான். தெலுங்கு சினிமாவில் இந்த ஆண்டு வெளியான சீனியர் நடிகர்களின் படங்கள் எல்லாம் பெரிய வசூல் செய்யவில்லை.
ஆனால், அதற்கெல்லாம் ஈடு செய்யும் விதமாக கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியான பிரபாஸ் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. ஷாருக்கானின் டங்கி படத்துடன் மோதினாலும் அந்த படம் காமெடி படம் என்பதால், ஆக்ஷன் விரும்பிகள் தான் இந்தியா முழுவதும் அதிகம் உள்ள நிலையில், சலார் சக்கைப் போடு போட்டு வருகிறது.

பில்டப்பை ரசிக்கிறாங்க: நல்ல திரைக்கதை எல்லாம் தேவையில்லை. தங்களுக்குப் பிடித்த ஹீரோக்கள் ஸ்லோ மோஷனில் நடந்து வந்தாலே போதும். சில துப்பாக்கி காட்சிகள் இடம்பெற்றால் பாக்ஸ் ஆபிஸ் தெறிக்கும் நிலைக்கு இந்திய சினிமா தள்ளப்பட்டு வருவது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்றாலும் ரசிகர்கள் அந்த பில்டப்பை தான் ரசிக்கிறாங்க என்பது தெளிவாக தெரிகிறது. சலார் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் தங்களுக்கு கிடைத்த பெரிய ஆயுதம் இதுதான் என அந்த படத்தைப் பார்த்து வருவதாக கூறுகின்றனர்.
500 கோடி வசூல்: பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் வரிசையாக சொதப்பி வந்த நிலையில், சலார் படம் 4 நாட்களில் கிறிஸ்துமஸ் விடுமுறையை சரியாக பயன்படுத்திக் கொண்டு 500 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வமாகவே 3 நாட்களில் சலார் படம் 405 கோடி ரூபாயை வசூல் செய்த நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை மேலும், அதிக வசூலை ஈட்டித் தந்திருப்பதாக கூறுகின்றனர்.
ஜெயிலர் வசூலுக்கு வேட்டு?: 4 நாட்களில் சலார் திரைப்படம் 526 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலான 525 கோடிக்கு அதற்குள் வேட்டு வந்து விட்டதே என்றும் தென்னிந்தியாவில் அதிக வசூல் ஈட்டிய படமாக இந்த ஆண்டு சலார் மாறப் போகிறது என்றும் கூறி வருகின்றனர். ஆனால், இன்று மாலை தான் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த நிலவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. 4 நாட்களில் கடக்கவில்லை என்றாலும் 5வது நாளான இன்று கடந்து விடும் என்றும் கூறுகின்றனர்.
லியோவுக்கும் ஆப்பு: ஜெயிலர் வசூலை மட்டுமல்ல இரண்டாவது வாரத்தில் விஜய்யின் லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸுக்கும் ஆப்பு அடிக்க காத்திருக்கிறார் பிரபாஸ் என்றும் இதே ஸ்பீடில் படம் ஓடினால் 1000 கோடி வசூல் சாத்தியம் என்றும் டோலிவுட்டில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வருகின்றனர். பிரபாஸ் சலார் படம் ஹிட் அடித்தால் அடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படத்துக்கு மிகப்பெரிய ஹைப் எகிறும் என்றும் அந்த படத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் நிலையில், படம் இன்னும் பெரிய உச்சத்தை தொடும் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
4 படங்கள்: சலார் படத்தைத் தொடர்ந்து கல்கி, மாருதி, ஸ்பிரிட் மற்றும் சலார் 2ம் பாகம் என வரிசையாக இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிரபாஸ் பிஸியாகத்தான் இருக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர். அவரது சம்பளத்தையும் சுமார் 200 கோடி வரை அதிகரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











