Salaar: ராஜமெளலிக்கு சலார் டீம் கொடுத்த சர்ப்ரைஸ்... பாகுபலியாக கம்பேக் கொடுப்பாரா பிரபாஸ்..?

ஹைதராபாத்: பிரபாஸின் சலார் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜமெளலிக்கு சலார் டீம் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளது.

ராஜமெளலிக்கு சலார் டீம் கொடுத்த சர்ப்ரைஸ்
கேஜிஎஃப் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். கேஜிஃப் படத்தின் இரண்டு பாகங்களும் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடின. இதனையடுத்து பிரபாஸுடன் இணைந்தார் பிரசாந்த் நீல். ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான சலார் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 Salaar: Director Rajamouli buys the first ticket for Salaar Cease Fire

பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சலார் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம் சலார் டீசரில் கலர் டோன், மேக்கிங் ஸ்டைல் என எல்லாமே கேஜிஎஃப் ஸ்டைலில் இருந்ததாக ரசிகர்கள் கூறியிருந்தனர். ஆனால், சலார் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸ் போல அழுத்தமான கதையுடன் உருவாகியுள்ளதாக பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சலார் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரபாஸ், பிருத்விராஜ், பிரசாந்த் நீல் மூவரும் கலந்துகொண்டனர். அவர்களுடன் சலார் உருவானது குறித்து இயக்குநர் ராஜமெளலி நேர்காணல் செய்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் ராஜமெளலிக்கு சலார் டீம் சர்ப்ரைஸ் கொடுத்தது.

அதன்படி, சலார் படத்தின் முதல் டிக்கெட் ராஜமெளலிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. காலை 7 மணி காட்சிக்கான டிக்கெட்டை ராஜமெளலி பெற்றுக்கொண்ட போட்டோவை ஹோம்பலே ஃபிலிம்ஸ் ஷேர் செய்துள்ளது. பிரபாஸ், ரசிகர்களால் பான் இந்தியா ஹீரோவாக கொண்டாடப்பட ராஜமெளலியின் பாகுபலி திரைப்படம் தான் காரணமாக அமைந்தது. ஆனால் அதன்பின்னர் பிரபாஸுக்கு எந்த படமும் ஹிட்டாக அமையவில்லை.

அந்த குறையை சலார் திரைப்படம் தீர்த்து வைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சலார் படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதேபோல் சலார் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடம் 22 நொடிகள் எனவும் சொல்லப்படுகிறது. கேஜிஎஃப் போல சலாரும், பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் என ஹோம்பலே ஃபிலிம்ஸ் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X