Salaar Flop Show: சலார் சாயம் வெளுத்தது.. வசூல் எல்லாமே வடை ஃபேக்டரியா?.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்!

சென்னை: நடிகர் பிரபாஸுக்கு இந்த படமாவது மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தியேட்டரில் ரசிகர்களை கதை சொல்கிறேன் என்கிற பெயரில் பிரசாந்த் நீல் கழுத்தை அறுத்தது தான் மிச்சம். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு எழுத்துக்களாக நடிகர்கள் பேசுவதும், அருந்ததி பட எஃபெக்ட்டை ஆயம்மா எல்லாம் கொடுப்பதும், ஒரு விஷயத்தை சொல்ல வருவதற்கு முன்பே நடிகர்கள் ரியாக்ட் செய்வதும், பிரபாஸ் பக்கத்தில் வந்து அடிக்க கை ஓங்குவதற்கு முன்பே ஃபைட்டர்கள் பறப்பது என கிராஃப்ட்டாகவே பிரசாந்த் நீல் பிரபாஸை மோசம் செய்து விட்டார்.

சொல்ல வந்த கதையை விட காட்டிய விதத்திலேயே பல குறைகள் படம் முழுக்க பரவி கிடக்கிறது. பிரபாஸின் சண்டைக் காட்சிகளை தவிர படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு எந்தவொரு கூஸ்பம்ப்ஸ் நிகழ்வுகளும் படத்தில் இல்லாதது மற்றும் அம்மா சென்டிமென்ட் சாப்பாட்டுல காரப்பொடி போட்டு சாப்பிடுறது என வச்சு செய்து விட்ட நிலையில், இந்த படம் எப்படி முதல் நாளில் அத்தனை கோடி வசூல் ஈட்டியது என்கிற கேள்வியை எழுப்பி #SalaarFlopShow இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Salaar Flop Show hashtag trending and Shah Rukh Khan fans stirs fake box office issue

பிரபாஸுக்கு பில்டப்: இத்தனை பில்டப் கொடுத்து நடிப்பதற்கு பதிலாக பிரபாஸ் சூப்பர் ஹீரோ படத்திலேயே நடித்து விடலாம். கான்சார் முழுவதும் துப்பாக்கிகள், பீரங்கிகள் இருந்தாலும் பிரபாஸுக்கு முன்னதாக பலரும் கத்தியை மட்டுமே பயன்படுத்த, அவர்களை துவம்சம் செய்து விடுகிறார் பிரபாஸ். படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை வெறும் வெத்து பில்டப் ஆகவே சலார் இருந்தது படத்துக்கு சரிவாக மாறியுள்ளது.

ராமராக ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் நடித்தாலும் ராமர் போலவே இல்லையே என்கிற ட்ரோல்கள் தான் குவிந்தன. பிரசாந்த் நீல் படம் நிச்சயம் பிரபாஸுக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

சலார் சாயம் வெளுத்தது: சலார் படம் சரியான பித்தலாட்ட வேலை என்றும் அந்த படத்தில் எந்த ஒரு பிளஸ் பாயிண்ட்டும் இல்லை என நெட்டிசன்கள் குறிப்பாக ஷாருக்கான் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். பிரபல விமர்சகர்களும் சலார் படத்தை எந்த அளவுக்கு கழுவி ஊற்ற முடியுமோ அந்த அளவுக்கு கழுவி ஊற்றி வருகின்றனர். கன்னடத்தில் வெளியான உக்ரம் படத்தை பிரசாந்த் நீல் பிரபாஸுக்காக தெலுங்கில் பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்த படம் தான் சலார் என சோலியை முடித்துள்ளனர்.

வசூல் வடை: ஜெயிலர் படத்தின் வசூல் எல்லாம் வடை என விஜய் ரசிகர்களும், லியோ பட வசூல் பெரிய வடை ஃபேக்டரி என ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்களும் சண்டையிட்டு வந்ததை போல தற்போது பிரபாஸின் சலார் படத்தின் வசூல் கணிப்பு எல்லாம் பொய் என்றும் இரண்டாம் நாள் வசூல் 60 சதவீதம் சரிவடைந்துள்ளது என #SalaarFlopShow ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், ஷாருக்கானின் டங்கி திரைப்படம் நல்ல கதை, சோஷியல் டிராமா என அந்த படத்தையும் புரமோட் செய்து வருகின்றனர். ஆனால், பிரபாஸ் ரசிகர்கள் பிரபாஸ் அடிக்கிற ஒவ்வொரு அடியும் பாக்ஸ் ஆபிஸில் இடி மாதிரி விழும் என உறுதியாக நம்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X