Salaar: ரிலீஸில் இருந்து பின்வாங்கிய சலார்... வரிசை கட்டும் தமிழ்ப் படங்கள்... லிஸ்ட் ரொம்ப பெருசு!

சென்னை: பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் சலார்.

ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவிருந்தது.

இந்நிலையில் திடீரென சலார் ரிலீஸ் தேதி நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து செப்டம்பர் 28ம் தேதி தமிழில் சில முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகவுள்ளன.

 Salaar: Iraivan, Raththam, and more films will be released on Sep 28 for Salaar

ரிலீஸில் இருந்து பின்வாங்கிய சலார்: பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின்னர் பான் இந்தியா சூப்பர் ஸ்டாராகிவிட்டார் பிரபாஸ். ஆனால், பாகுபலிக்குப் பின் வெளியான படங்கள் எதுவும் பிரபாஸுக்கு எதிர்பார்த்தளவில் ஹிட் கொடுக்கவில்லை. இதனால், சலார் படத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். கேஜிஎஃப் மூலம் இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்கவைத்த பிரசாந்த் நீல், சலார் படத்தை இயக்கியுள்ளார்.

அதன்படி பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள சலார் படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள சலார், செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால் இந்தப் படத்தின் ட்ரெய்லர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சலார் படத்தின் ட்ரெய்லரை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது. VFX உள்ளிட்ட சில கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால், சலார் படத்தின் ரிலீஸ் தேதியே மாற்றப்பட்டுள்ளதாம். அதாவது செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸாகவிருந்த சலார், நவம்பர் 10ல் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதே தேதியில் தான் சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

சலார் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதால் பிரபாஸ் ரசிகர்கள் சோகத்தில் இருந்தாலும், கோலிவுட்டில் சில ஹீரோக்கள் நிம்மதியடைந்துள்ளனர். செப்டம்பர் 7ம் தேதி ஷாருக்கானின் ஜவான் வெளியாகிறது, அதேபோல் 28ம் தேதி சலாரும், அக்டோபர் 19ம் தேதி விஜய்யின் லியோவும் வெளியாகும் சூழல் இருந்தது. இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் தங்களது படங்களை வெளியிட முடியாமல் தடுமாறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது சலார் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதனையடுத்து ஜெயம் ரவியின் இறைவன், விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் படங்கள் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. மேலும், ஹரிஸ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங், சித்தார்த்தின் சித்தா, இயக்குநர் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு ஆகிய படங்களும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X