சலார் படம் எந்தப் படத்தோட காப்பியும் இல்லை... பிரஷாந்த் நீல் விளக்கம்

ஐதராபாத் : கேஜிஎப் படங்களின் நாயகன் இயக்குநர் பிரஷாந்த் நீல். அவரது கற்பனைக்கு உருவம் கொடுத்தவர் யஷ்.

இவர்கள் இருவரின் கூட்டணியில் மிரட்டலாக வெளியாகி தற்போது 1200 கோடி வசூலை நெருங்கி வருகிறது கேஜிஎப் 2 படம்.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரஷாந்த் நீல். படத்தில் இதுவரை இல்லாத வகையில் பிரபாசை பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

கேஜிஎப் சாப்டர் 2 படம்

கேஜிஎப் சாப்டர் 2 படம்

கேஜிஎப் பாகம் ஒன்று கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் இதன் இரண்டாவது பாகம் வெளியாகி ரசிகர்களை மேலும் மிரட்டியது. படம் ஒரு மாதத்தை கடந்து தற்போதுவரை திரையரங்குகளில் ஓடி வருகிறது.

கேங்ஸ்டர் கதைக்களம்

கேங்ஸ்டர் கதைக்களம்

இந்தப் படங்களை இயக்கியிருந்தார் பிரஷாந்த் நீல். இந்தப் படங்கள் கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக கொண்டு வெளியாகின. இந்தப் படங்கள் கன்னடத் திரையுலகை மற்ற திரையுலகினர் திரும்பிப் பார்க்க செய்துள்ளனர். தொடர்ந்து கன்னட படங்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம் என்று யஷ் மற்றும் பிரஷாந்த் நீல் தெரிவித்திருந்தனர்.

சலார் படத்தை இயக்கும் பிரஷாந்த் நீல்

சலார் படத்தை இயக்கும் பிரஷாந்த் நீல்

இந்நிலையில் அடுத்ததாக பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரஷாந்த் நீல். கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் சூட்டிங்கி துவங்கிவிட்டது. தற்போது முதல்கட்டமாக 30 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

சலார் காப்பி கிடையாது

சலார் காப்பி கிடையாது

அடுத்ததாக இரண்டாவது கட்ட சூட்டிங் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை எந்தப் படங்களின் காப்பி கிடையாது என்றும் நேரடியாக கதை, திரைக்கதை எழுதப்பட்டு படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரஷாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

குழப்பிக் கொள்ள வேண்டாம்

குழப்பிக் கொள்ள வேண்டாம்

கதையையும் அதன் இயக்கத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் தன்னுடைய கதைகள் எப்போதுமே தீவிரமாக இருக்கும் என்றும் தன்னுடைய கதையின் காட்சிகள் தனியாக தெரியும் வகையில் தான் இயக்கத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வன்முறை தூக்கலான படம்

வன்முறை தூக்கலான படம்

பிரபாஸ் எப்போதுமே அமைதியான நடிப்பை வெளிப்படுத்துவார். அவரது பாகுபலி படங்களே அவரது ஆக்ரோஷத்தை அதிகமாக வெளிப்படுத்திய படங்களாக உள்ளது. இந்நிலையில் சலார் படத்தில் அவர் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் வன்முறை தூக்கலாக நடித்துள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக என்டிஆர் 31 படம்

அடுத்ததாக என்டிஆர் 31 படம்

சலார் படத்தின் சூட்டிங் செப்டம்பரில் நிறைவடையும் அடுத்ததாக கேஜிஎப் 3 படத்தை பிரஷாந்த் நீல் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் என்டிஆர்31 படத்தை அறிவித்துள்ளார் பிரஷாந்த் நீல். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X