Salaar First Single - ஆகாச சூரியன்.. வெளியானது சலார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ரசிகர்கள் வரவேற்பு
சென்னை: Salaar First Single (சலார் முதல் சிங்கிள்) பிரபாஸ் நடித்திருக்கும் சலார் படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரபாஸ். அதன் இரண்டு பாகங்களுமே பான் இந்தியா படமாக வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பின. மேலும் தெலுங்கு சினிமாவும் இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்வதும் பாகுபலிதான். அதன் காரணமாக பிரபாஸ் பெரிய அளவில் அறியப்பட்டார்.

சறுக்கல்கள்: பாகுபலி படம் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. கடைசியாகக்கூட ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். அந்தப் படமும் பான் இந்தியா படமாக வெளியானது. ஆனால் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது படம். ஆதிபுருஷ் படத்தில் நடித்ததெல்லாம் பிரபாஸுக்கு தேவையில்லாத வேலை என்றே பலரும் கூறினார்கள்.
சலார்: சூழல் இப்படி இருக்க எப்படியாவது ஒரு மெகா ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற திவீர முனைப்பில் இருக்கிறார் பிரபாஸ். அதற்காக கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி முன்னணி இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கும் பிரசாந்த் நீலுடன் கைகோர்த்திருக்கிறார் அவர். யஷ்ஷுக்கு எப்படி மிகப்பெரிய திருப்புமுனையை பிரசாந்த் கொடுத்தாரோ அதேபோல் தனக்கும் கொடுப்பார் என்ற பெரும் நம்பிக்கையுடன் சலார் படத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ்.
கவனம் ஈர்த்த டீசர்: படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கு பலரும் பெரும் வரவேற்பை கொடுத்தார்கள். ஆனாலும் அப்படியே கேஜிஎஃப் ஸ்டைலிலேயே இருக்கிறதே என்ற விமர்சனமும் எழுந்தது. படமானது டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
முதல் சிங்கிள்: இந்நிலையில் சலார் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆகாச சூரியனே என்ற சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடல் நட்பை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. பாடல் மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இப்பாடல் பக்கா எமோஷனலாக அமைந்திருப்பதால் கண்டிப்பாக படத்தில் பெரிய தாக்கத்தை இந்தப் பாடல் உருவாக்கும் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











