Salaar OTT Release: சலார் OTT ரைட்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்... ரிலீஸ் தேதி எப்பன்னு தெரியுமா?

சென்னை: பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பிரம்மாண்டமான ஓபனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில், சலார் படத்தின் ஓடிடி ரைட்ஸ் மட்டுமின்றி, அது ரிலீஸாகும் தேதி குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

சலார் ஓடிடி அப்டேட்
பான் இந்தியா மாஸ் ஹீரோ பிரபாஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சலார் திரைப்படம் நேற்று வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான சலாருக்கு முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹோம்பலே ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

 Salaar OTT Rights: Prabhas starrer Salaar OTT Rights bagged by Netflix

சலார் அறிவிப்பு வெளியான நாள் முதலே இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றபடி நேற்று ரிலீஸான சலார் முதல் நாளில் மட்டும் 165 முதல் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டுமே ரூ.145 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 30 கோடி வரை கலெக்‌ஷன் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் சலார் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி படக்குழு அபிஸியலாக அறிவிக்கவில்லை.

ஷாருக்கானின் டங்கி படத்துக்குப் போட்டியாக வெளியான சலார் தான் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் சலார் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈஸியாக கடந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சலார் ஓடிடி ரைட்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாம். தியேட்டர் ரிலீஸில் மாஸ் காட்டும் சலார், ஓடிடியிலும் சம்பவம் செய்யும் என்பது கன்ஃபார்ம்.

அதனால், சலார் ஓடிடி உரிமையை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் முட்டி மோதியுள்ளன. இதில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 150 கோடி ரூபாய் வரை செலவு செய்து சலார் ஓடிடி ரைட்ஸை வாங்கியதாகத் தெரிகிறது. அதேநேரம் சலார் ஓடிடி ரைட்ஸ் 200 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக இன்னொரு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சலார் திரைப்படம் நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகும் என ஓடிடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சலார் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்ததோடு, முதல் நாளிலேயே 175 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. ஆனாலும், இந்தப் படம் எதிர்பார்த்தளவில் இல்லை எனவும், மேக்கிங் மட்டுமே பிரம்மாண்டமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியிருந்தனர். கதை, திரைக்கதை போன்றவையில் சுவாரஸ்யம் இல்லை என்பதோடு, ரன்னிங் டைமும் அதிகம் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

இதனால் சலார் படம் பார்க்க தியேட்டர் செல்ல வேண்டாம், ஓடிடியில் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என பெரும்பாலான ரசிகர்கள் முடிவெடுத்துவிட்டனர். இந்நிலையில், சலார் ஜனவரி மாதம் இறுதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என ஓடிடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X