Salaar: தீபாவளி, பொங்கல் ரேஸில் வாய்ப்பே இல்ல... பரிதாபத்தில் பிரபாஸின் சலார் ரிலீஸ் தேதி..?

சென்னை: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சலார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள சலார், செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவிருந்தது.

ஆனால், திடீரென ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் சலார் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Salaar: Prabhas Salaar is expected to be released in March 2024

பரிதாபத்தில் பிரபாஸின் சலார் ரிலீஸ் தேதி: பான் இந்தியா ஹீரோவான பிரபாஸ், தற்போது கல்கி படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்து வந்த சலார், இம்மாதம் 28ம் தேதி ரிலீஸாகவிருந்தது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. பான் இந்தியா படமான சலார் ரிலீஸுக்காக பிரபாஸ் ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், திடீரென சலார் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. VFX உட்பட கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால், சலார் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அபிஸியலாக தெரிவித்திருந்தது. மேலும், சலார் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், எதிர்பாராத சூழலால் சொன்னபடி செப்டம்பர் 28ம் தேதி வெளியாகாது என குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து சலார் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி, இந்தப் படம் தீபாவளி ஸ்பெஷலாக நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் இல்லை என்றும், அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் எனவும் அடுத்தக்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் தற்போது தீபாவளி, பொங்கல் ரேஸில் சலார் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

சலார் கிராபிக்ஸ் பணிகளுக்கு இன்னும் நேரம் எடுக்கும் என்பதால், அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகவும் வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அதனால், 2024ம் ஆண்டு மார்ச் மாதம் சலார் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஏற்கனவே பிரபாஸின் கல்கி திரைப்படம், 2024 பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டு, பின்னர் ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் சலார், பிரசாந்த் நீலின் முந்தைய படமான KGF-ஐ மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தில் கேஜிஎஃப் யாஷ், கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X