Salaar: சலார் படத்துக்கு சென்சார் போர்டு வைத்த செக்... ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா..?
சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் சென்சார், ரன்னிங் டைம் பற்றி அப்டேட் வெளியாகியுள்ளது. அதேபோல், சலார் படத்துக்கு ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் கிடையாது எனவும் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

சலார் சென்சார் அப்டேட்
பிரபாஸ், ப்ருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். கேஜிஎஃப் படம் மூலம் கவனம் ஈர்த்த பிரசாந்த், அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் இணைந்தார். பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி உறுதியானது முதல் சலார் படத்துக்கு பான் இந்தியா அளவில் எதிர்பார்ப்பு எகிறியது.
பிரபாஸ் ஏற்கனவே பாகுபலி திரைப்படம் மூலம் பான் இந்தியா ஹீரோவாகிவிட்டார். அதேபோல் கேஜிஎஃப் படங்கள் மூலம் பிரசாந்த் நீலும் மாஸ் காட்டினார். இதனால் இருவரும் இணையும் சலாருக்கு ஹைப் உருவானது. பிரபாஸ், ப்ருத்விராஜ் இருவரது நட்பை பின்னணியாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது சலார்.
அதேநேரம் சமீபத்தில் வெளியான சலார் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள், கலர் டோன், மேக்கிங் ஸ்டைல் ஆகியவை கேஜிஎஃப் படம் போல இருப்பதாகக் கூறியிருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்தின் சென்சார், ரன்னிங் டைம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்தப் படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாம். ட்ரெய்லரிலேயே அதிகமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதனால், சலார் படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் தியேட்டரில் ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சலார் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடம் 22 நொடிகள் என தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களை போல சலாரும், பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் என ஹோம்பலே ஃபிலிம்ஸ் நம்பிக்கையுடன் இருக்கிறதாம். இதனால் சலார் படத்துக்கு ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவில்லையாம். அதேபோல், இந்தப் படத்தில் ஒரேயொரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











