Salaar Release Date: பிரபாஸின் சலார் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... உஷாரான லியோ டீம்!

ஹைதராபாத்: கேஜிஎஃப் படத்தின் இரண்டு சீரிஸ்களை இயக்கியதன் மூலம் பிரபலமான பிரசாந்த் நீல், தற்போது சலார் படத்தை இயக்கி வருகிறார்.

பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

கேஜிஎஃப் படங்களை தொடர்ந்து ஹோம்பலே ஃபிலிம்ஸ் தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 Salaar Release Date: Prabhas starrer Salaar film will release on Sep 28

பிரபாஸின் சலார்:

பாகுபலி திரைப்படத்துக்கு கிடைத்த வெற்றியால், பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார் பிரபாஸ். ஆனாலும், பாகுபலிக்குப் பின்னர் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் திரைப்படங்கள் மிகப் பெரிய தோல்வியைத் தழுவின. இதனால் தரமான ஹிட் கொடுக்க வேண்டும் என காத்திருக்கும் பிரபாஸுக்கு, சலார் திரைப்படம் தான் நம்பிக்கை அளித்துள்ளது.

இந்நிலையில், சலார் படத்தின் ரிலீஸ் தேதியை ஹோம்பலே ஃபிலிம்ஸ் அதிகாரப்பூரமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சலார் படத்தின் ரிலீஸ் தேதியால், பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதேநேரம் விஜய்யின் லியோ டீம் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம், அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இந்த சூழலில் லியோ ரிலீஸுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக சலார் வெளியானால், அது லியோவின் வசூலை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. விஜய்யின் பீஸ்ட் வெளியான மறுநாளில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 2 திரைப்படமும் ரிலீஸானது. இறுதியாக பீஸ்ட் படத்தை விட கேஜிஎஃப் 2க்கு தான் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் நீல் இயக்கும் சலார், கேஜிஎஃப் படங்களைப் போன்று பக்கா ஆக்‌ஷன் மெட்டீரியலாக இருக்கும் என சொல்லப்படுகிற்து. பிருத்விராஜ் வரதராஜ மன்னார் என்ற வில்லன் கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் சலார் படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாக காணப்படுகிறது. அதேபோல், பிரபாஸ் கேரியரில் சலார் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வெற்றிப் பெற்றால் தான் ப்ராஜக்ட் கே அவரின் அடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 Salaar Release Date: Prabhas starrer Salaar film will release on Sep 28

சலார் படத்துக்கு முன்னதாக பிரபாஸின் ஆதிபுருஷ் வெளியாகவுள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படம் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. பிரபாசுடன் சையிப் அலிகான், கீர்த்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ், இந்தாண்டு ஜூன் 16ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்தப் படத்திற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆதிபுருஷ் டீம் கலக்கத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X