பிரபாஸுக்கும் பிரசாந்த் நீலுக்கும் சண்டையா?.. திடீரென வெளியான பதிவு.. சலார் 2 என்ன ஆச்சு?

ஹைதராபாத்: பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக சலார் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் திடீரென சலார் 2 திரைப்படம் நிறுத்தப்பட்டதாகவும் பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் இடையே மிகப் பெரிய சண்டை வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக படக்குழு ஒரு போஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஈஸ்வர் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபாஸ். ராகவேந்திரா, வர்ஷம், சக்கரம், சத்ரபதி, யோகி, பில்லா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட், ரிபெல், ஆக்சன் ஜாக்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த பிரபாஸ் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நடிகராக மாறி இருந்தார்.

Salaar team gives befitting reply to ongoing Salaar 2 movie shelved rumour

ஆனால், அவரை உலக அளவில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் தான். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 படங்கள் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்தி பாலிவுட் நடிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

பிரபாஸுக்கே கஷ்டம்: பாகுபலி 2 படைத்த 1800 கோடி ரூபாய் வசூல் சாதனையை அதன் பின்னர் பல படங்களில் பல ஆண்டுகளாக நடித்தும் பிரபாஸே அதை முறியடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், கடந்த ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் 700 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது. மீண்டும் ராஜமௌலி உடன் பிரபாஸ் இணைந்தால் தான் 2000 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சலார் 2: கே ஜி எஃப் 1 மற்றும் 2 பாகங்களை இயக்கி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்திவிராஜ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்த சலார் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின.

சலார் 2 ட்ராப்?: பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் சலார் 2 திரைப்படம் அப்படியே நிறுத்தப்பட்டதாகவும் அந்த படம் இதற்கு மேல் மீண்டும் உருவாக வாய்ப்பே இல்லை என நேற்று டோலிவுட் மீடியாவில் சில வதந்திகள் காட்டுத்தீ போல பரவின. இந்நிலையில், படக்குழு அதற்கு தற்போது விளக்கம் அளிக்கும் விதத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளது.

சிரிக்கிறாங்க: சலார் 2 திரைப்படம் நிறுத்தப்பட்டதாக வதந்திகள் உலா வந்த வண்ணம் உள்ள நிலையில், சலார் படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து தற்போது ’They can't stop laughing’ என்கிற போஸ்ட் ஒன்று போடப்பட்டுள்ளது. பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

கல்கி 2898 ஏடி: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள கல்கி திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படம் தொடர்பான புரோமோஷன்களில் பிரபாஸ் பிஸியாக உள்ள நிலையில் தற்காலிகமாக சலார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X