Salaar Teaser: சலார் டீசர் ரிலீஸ் அப்டேட்... என்னங்க சார் டைம் இது... என்ன இப்படி இறங்கிட்டாங்க?
ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.
600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 450 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் கடும் ஏமாற்றத்தில் இருந்த பிரபாஸ் ரசிகர்களுக்கு தற்போது தரமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி சலார் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.

சலார் டீசர் ரிலீஸ் அப்டேட்:தெலுங்கு திரையுலகின் டார்லிங் பிரபாஸ் தற்போது சலார், ப்ராஜெக்ட் கே படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக கடந்த மாதம் அவர் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் நெகட்டிவான விமர்சனங்களால் படுமொக்கை வாங்கியது. 600 கோடி பட்ஜெட்டில் உருவான ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸில் இன்னும் 500 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என வரிசையாக தோல்வி படங்கள் கொடுத்து ரொம்பவே நொந்து போய்விட்டார் பிரபாஸ். பாகுபலி படத்துக்கு பின்னர் தரமான கம்பேக் கொடுப்பதற்காக காத்திருக்கிறார் பிரபாஸ். இந்நிலையில், பிரபாஸின் இந்த நம்பிக்கைக்கு சலார் திரைப்படம் நல்ல ரிசல்ட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவையே மிரட்டிய பிரசாந்த் நீல் தான் சலார் படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்தப் படமும் கேஜிஎஃப் போல ஆக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபாஸ், பிருத்விராஜ், பிரசாந்த் நீல் என முதன்முறையாக இணைந்துள்ள இந்த மூவர் கூட்டணி செம்ம ட்ரீட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனை எகிற வைக்கும் வகையில் சலார் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.

அதன்படி, சலார் டீசர் ஜூலை 6ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. முக்கியமாக ஜூலை 6ம் தேதி அதிகாலை 5.12 மணிக்கு வெளியாகவுள்ளது ரசிகர்களுக்கு ஷாக்கிங்காக அமைந்துள்ளது. காலங்காத்தால யாருப்பா டீசர் ரிலீஸ் பண்ணுவாங்க என படக்குழுவை கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள். நல்ல நேரமாக இருந்தாலும் இதெல்லாம் ஓவரா இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சலார் திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்போதே டீசரை வெளியிட்டால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைவிட முக்கியமாக ஆதிபுருஷ் ட்ரோல்கள் எல்லாம் சலார் டீசரில் ஓரங்கட்டப்படும் என்பதே பிரபாஸின் நம்பிக்கையாக உள்ளது. சலார் படத்தை தொடர்ந்து ஜனவரி மாதம் ப்ராஜெக்ட் கே படமும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











