Salaar Trailer: தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்.. மிரட்டும் சலார் ட்ரெய்லர்.. பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். வரும் 22ம் தேதி சலார் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகி மாஸ் காட்டி வருகிறது.

வெளியானது சலார் ட்ரெய்லர்
பாகுபலி படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாஸ் காட்டத் தொடங்கினார் பிரபாஸ். இதனால் பாகுபலிக்கு பின்னர் வெளியான பிரபாஸின் படங்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனாலும் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் படங்கள் மரண அடி வாங்கின. நெகட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

 Salaar Trailer: Prabhas and Prithviraj starrer Salaar trailer has been released now

இதனால் சலார் படத்தை பெரிதும் நம்பியிருந்தார் பிரபாஸ். கேஜிஎஃப் படம் மூலம் பிரபலமான பிரசாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதனால் முதன்முறையாக பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியின் மேஜிக்கை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். இவர்களுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் சலார் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இன்று காலை 10.42 மணிக்கு வெளியாகவிருந்த சலார் ட்ரெய்லர், திடீரென மதியம் 2 மணிக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. ஆனாலும் சில நிமிடங்கள் தாமதமாகவே வெளியானது சலார் ட்ரெய்லர். அதன்படி தற்போது ரிலீஸான சலார் ட்ரெய்லர் செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. சீன் பை சீன் மேக்கிங்கில் மிரட்டியுள்ளார் பிரசாந்த் நீல். அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகளும் ஹாலிவுட் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளன.

முக்கியமாக ஆக்‌ஷனில் செம்ம மாஸ் காட்டியுள்ளார் பிரபாஸ். இரண்டு உயிர் நண்பர்கள் விரோதியாக மாறியது தான் கதை என்பதையும் ட்ரெய்லரிலேயே லீட் கொடுத்துள்ளார் பிரசாந்த் நீல். இதனால் படம் முழுக்க அதகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலிக்குப் பின்னர் சரியான கம்பேக் இல்லாமல் தவித்து வந்த பிரபாஸ், சலார் வெளியானதும் ஃபீனிக்ஸ் போல சம்பவம் செய்வார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அந்தளவிற்கு சலார் ட்ரெய்லர் படத்துக்கு பெரிய அளவில் ஹைப் கொடுத்துள்ளது. பிரபாஸுடன் பிருத்விராஜ்ஜும் மாஸ் காட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியான சலார் ட்ரெய்லர் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் சலார் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முன்னதாக சலார் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

பிரபாஸ், பிருத்விராஜ், பிரசாந்த் நீல் பங்கேற்ற இந்த ப்ரொமோஷன்ஸ் நிகழ்ச்சியை இயக்குநர் ராஜமெளலி ஹோஸ்ட் செய்தார். அதில் சலார் உருவானது குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பிரசாந்த் நீல் பகிர்ந்துள்ளார். பிரபாஸ், பிருத்விராஜ் இருவரும் தங்களது சலார் அனுபவங்களை ஷேர் செய்தனர். இந்த நிகழ்ச்சியின் போது, சலார் படத்தின் முதல் டிக்கெட் ராஜமெளலிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X