Salaar Trailer: “சான்ஸே இல்ல... சலார் ட்ரெய்லர் மரண மாஸ்..” பாராட்டிய ‘பாலிவுட்’ பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான ஆதிபுருஷ் திரைப்படம், எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் படுதோல்வியடைந்தது. இதனால், பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்தை அதிகம் நம்பியுள்ளார் பான் இந்தியா ஹீரோ பிரபாஸ்.

ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சலார் படத்தின் ட்ரெய்லர் குறித்து 'பாலிவுட் பயில்வான் ரங்கநாதன்' என்றழைக்கப்படும் உமைர்சந்து பாராட்டியுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

 Salaar Trailer: Prabhas Salaar trailer is reportedly going to be a surprise treat for fans

சலார் ட்ரெய்லர் மரண மாஸ் : பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே எனப்படும் கல்கி படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ஆதிபுருஷ், மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. இதிலிருந்து மீண்டுவர வேண்டும் என பிரபாஸ் காத்திருக்கிறார். இதனை பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் திரைப்படம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள சலார் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, சலார் திரைப்படத்தையும் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனால் சலார் படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்படுகிறது.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள சலார், செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில், இதன் டீசர் கடந்த மாதம் வெளியானது. இதனையடுத்து தற்போது சலார் ட்ரெய்லரும் வெளியாகவுள்ளதாம். எப்போது வேண்டுமானாலும் சலார் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சலார் ட்ரெய்லர் குறித்து பரபரக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகர்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு பிரபலமானவர் உமைர் சந்து.

தமிழில் பயில்வான் ரங்கநாதன் போல பாலிவுட்டில் உமைர் சந்து ரொம்பவே பிரபலம். பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் முன்பே அதன் விமர்சனம் போட்டு சுஹாசினியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் இவர். அதேபோல், பிரபாஸையும் அவரது படங்களையும் தொடர்ந்து ட்ரோல் செய்வதில், ரஜினியை கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறனையே மிஞ்சிவிடுவார். இவர் பிரபாஸின் சலார் ட்ரெய்லர் மிரட்டலாக உருவாகியுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

சலார் ட்ரெய்லர் படு மிரட்டலாக உருவாகியுள்ளதாகவும், இப்படியொரு ஆக்‌ஷன் படத்தை இதுவரை இந்தியாவில் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார். அதேபோல், சலார் திரைப்படம் தான் பிரபாஸுக்கு பெஸ்ட் கம்பேக்காக இருக்கும் எனவும், பின்னணி இசையில் ரவி பஸ்ரூர் மாஸ் காட்டியுள்ளதாகவும் உமைர் சந்து குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக பிரபாஸின் படங்களை ட்ரோல் செய்யும் உமைர்சந்து, சலார் ட்ரெய்லர் குறித்து பாசிட்டிவாக கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X