Salaar: சலார் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி... கன்ஃபார்ம் செய்த படக்குழு... பிரபாஸ் ரசிகர்கள் வெயிட்டிங்!
சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. கேஜிஎஃப் பிரபலம் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் பிரபாஸ், சலார் மீது மிகப் பெரிய நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். இந்நிலையில், சலார் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு.

சலார் ட்ரெய்லர் அப்டேட்
பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின்னர் பான் இந்தியா ஹீரோவாகிவிட்டார் பிரபாஸ். ஆனால், பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் என அடுத்தடுத்து பிரபாஸின் படங்கள் அனைத்தும் படு தோல்வியடைந்தன. இதனால், அவர் சலார் படம் மீது அதிக நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
கேஜிஎஃப் சீரிஸ் படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அவரது இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் முதல் படமான சலார், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபாஸுடன் பிருத்விராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படமும் கேஜிஎஃப் போல கேங்ஸ்டர் ஜானரில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவிருந்த சலார், டிசம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை என்பதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது சலார் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அபிஸியலாக அறிவித்துள்ளனர். அதன்படி, டிசம்பர் 1ம் தேதி இரவு 7.19 மணிக்கு சலார் ட்ரெய்லர் வெளியாகிறது.
பிரபாஸின் அமர்க்களமான போஸ்டருடன் இந்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால், பிரபாஸ் ரசிகர்கள் இப்போது முதலே சலார் மோடுக்கு மாறிவிட்டனர். இந்தப் படம் பிரபாஸ் கேரியரில் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் படங்கள் ஓவர் பில்டப் கொடுத்தும் ஒன்றுமில்லாமல் போனது. எனவே சலார் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சலார் ரிசல்ட் தான் பிரபாஸின் அடுத்தப் படமான கல்கியின் ப்ரீ ரிலீஸுக்கு சப்போர்ட்டாக இருக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம், கேஜிஎஃப் படங்களை போல சலாரையும் இயக்குநர் பிரசாந்த் நீல் கரை சேர்த்துவிடுவார் என பிரபாஸ் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











