Salaar Trailer: கடைசி நேரத்தில் மிஸ்ஸான சலார் ட்ரெய்லர்... ஏமாற்றத்தில் ரசிகர்கள்... என்னாச்சு..?

சென்னை: பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள சலார், வரும் 22ம் தேதி வெளியாகிறது. சலார் ட்ரெய்லர் காலை 10.42 மணிக்கு வெளியாகவிருந்த நிலையில், தற்போது டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக ரிலீஸாகவில்லை.

ஏமாற்றம் கொடுத்த சலார் ட்ரெய்லர்
பிரபாஸ் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சலார் திரைப்படம். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பிரசாந்த் நீல் - ஹோம்பலே கூட்டணியில் உருவான கேஜிஎஃப் போல, சலார் படமும் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

 Salaar Trailer: Salaar trailer release was delayed due to a technical issue

இந்த எதிர்பார்ப்புகளை இன்னும் எகிற வைக்கும் விதமாக சலார் ட்ரெய்லர் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் வெளியான சலார் டீசர் செம்ம மிரட்டலாக இருந்தது. அதனை மிஞ்சும் விதமாக சலார் ட்ரெய்லர் இருக்கும் என சொல்லப்பட்டது. இதனால் டிவிட்டரில் சலார் ட்ரெய்லர் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக சலார் ட்ரெய்லர் வெளியாகவில்லை. இதனால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஹோம்பலே ஃபிலிம்ஸ் அப்டேட் கொடுத்துள்ளது. சலார் ட்ரெய்லர் சொன்ன நேரத்தில் வரவில்லை என பயப்பட வேண்டாம். மதியம் 2 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் சலார் படக்குழுவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பாகுபலிக்குப் பின்னர் சரியான கம்பேக் இல்லாமல் தவித்து வந்த பிரபாஸ், சலார் வெளியானதும் ஃபீனிக்ஸ் போல சம்பவம் செய்வார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்தளவிற்கு சலார் ட்ரெய்லர் படத்துக்கு பெரிய அளவில் ஹைப் கொடுக்கும் என சொல்லப்படுகிறது. பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

முன்னதாக சலார் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. பிரபாஸ், பிருத்விராஜ், பிரசாந்த் நீல் பங்கேற்ற இந்த ப்ரொமோஷன்ஸ் நிகழ்ச்சியை இயக்குநர் ராஜமெளலி ஹோஸ்ட் செய்தார். அதில் சலார் உருவானது குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பிரசாந்த் நீல் பகிர்ந்துள்ளார். பிரபாஸ், பிருத்விராஜ் இருவரும் தங்களது சலார் அனுபவங்களை ஷேர் செய்தனர். இந்த நிகழ்ச்சியின் போது, சலார் படத்தின் முதல் டிக்கெட் ராஜமெளலிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X