Salaar vs Dunki: ஷாருக்கானா? பிரபாஸா? கிறிஸ்துமஸ் பாக்ஸ் ஆபிஸ் கோட்டையை பிடிக்கப் போறது யாரு?
மும்பை: 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பித்த பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து அடித்து ஆடி வருகிறார் பாலிவுட்டின் கிங் கான் ஷாருக்கான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் இந்த ஆண்டு குடியரசு தினத்தை குறி வைத்து பதான் படத்தை இறக்கி 1000 கோடி வசூலை சாத்தியமாக்கினார்.
அடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு என தென்னிந்திய நடிகர்களையும் இயக்குநரையும் வைத்துக் கொண்டு 1100 கோடி வசூலை சாத்தியமாக்கினார்.
அடுத்து டிசம்பர் மாதம் டன்கி படத்தை வைத்து மீண்டும் வசூல் வேட்டை நடத்த காத்திருக்கிறார். ஆனால், இந்த முறை ஷாருக்கானுக்கு செம டஃப் கொடுக்க சவுத்தில் இருந்து பிரபாஸ் டைனோசரஸ் போல நிற்கிறார்.

தொடர் தோல்வி: கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள சலார் படத்துக்கு பெரும் எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகர் பிரபாஸ் பாகுபலி படங்களுக்கு பிறகு நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், பிரபாஸ் படத்துக்கு இந்த போட்டியில் சற்றே பின்னடைவு உள்ளது தெரிகிறது.
கேஜிஎஃப் காப்பி: கேஜிஎஃப் படத்துக்கும் இந்த படத்துக்கும் தொடர்பு இல்லை என பிரசாந்த் நீல் சொல்லி வந்தாலும் படத்தின் மேக்கிங்கை பார்க்க அப்படியே கேஜிஎஃப் காப்பி போலவே உள்ளது என தெரிகிறது. படத்தின் கதையும் நண்பனுக்காக போர் வீரனாக உள்ள பிரபாஸுக்கு பிருத்விராஜ் அரியாசனைக்காக ஆப்பு வைக்க திட்டமிட்டு அதே ஆப்பில் அவர் மாட்டிக் கொள்வது தான் கதை என தெரிந்து விட்ட நிலையில், ஸ்க்ரீன்பிளே சுவாரஸ்யம் தான் ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வர வேண்டும்.
இந்தி பெல்ட் யாருக்கு: என்ன தான் பிரபாஸ் சாஹோ மற்றும் ஆதிபுருஷ் படங்களில் நடித்திருந்தாலும் ஷாருக்கான் உடன் மோதும் போது இந்தி பெல்ட் அதிகமான தியேட்டர்கள் ஷாருக்கானின் டன்கி திரைப்படத்துக்குத் தான் கிடைத்துள்ளது. தென்னிந்தியாவை அந்த படம் பெரிதும் டார்கெட் செய்யவில்லை என்றாலும், அனிமல் படத்தை போல ஒட்டுமொத்த வட இந்தியா மற்றும் ஓவர்சீஸை டார்கெட் செய்துள்ளது.
குறைவான தியேட்டர்கள்: டன்கி படத்துக்கு பிவிஆர், ஐநாக்ஸ், சினிபொலிஸ் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் முதல் சாதாரண தியேட்டர்கள் வரை வட இந்தியாவில் ஷாருக்கானின் டன்கி படத்துக்குத்தான் அதிகளவில் காட்சிகள் மற்றும் தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பிரபாஸின் சலார் படத்துக்கு ரொம்பவே குறைவு தானாம். நார்த் vs சவுத் கிளாஷ் இந்த கிறிஸ்துமஸில் நடைபெறும் நிலையில், இரண்டில் எந்த படம் ஆண்டு இறுதியில் அதிக வசூலை அள்ளப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications