Salary: ஜீ தமிழ் சீரியல் நடிகைகளின் சம்பளம்.. யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா?

சென்னை: இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது சீரியல்கள். இதனால் சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட தொலைக்காட்சிகளும் விதவிதமான கதைக்களத்துடன் பல சீரியல்களை காலையில் இருந்து இரவு வரை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களாக இருக்கின்றன. அந்த சீரியல்களில் நடித்த நடிகைகளின் சம்பளம் என்னென்ன என்பதை இந்த செய்திகள் பார்க்கலாம்

கார்த்திகை தீபம்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அனைவரின் மனம் கவர்ந்த சீரியலாக உள்ளது கார்த்திகை தீபம். இந்த சீரியலில், கார்த்திக் ராஜா லீட் ரோலிலும் ரேவதி ஹீரோயினாக நடித்துள்ளார். பிரிந்து இருக்கும் குடும்பத்தை ஒன்று சேர்த்து கோவில் கும்பாபிஷேகத்தை நடித்திவிட வேண்டும் என்று கார்த்திக் படாத பாடுபட்டு வருகிறார். இந்த சீரியலில், ரேவதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷ்ணவி சதீஷ் அவர் இந்த இதில் நடிப்பதற்கு ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதே போல அந்த சீரியலில் சாமுண்டீஸ்வரியாக நடிக்கும் ரேஷ்மா பசுபுலெட்டிக்கு 20 ஆயிரம் ரூபாயும், ஸ்வாதிக்கு 8 ஆயிரமும், மாயாவிற்கு 8 ஆயிரம், ரோகினிக்கு 10 ஆயிரம், துர்காவின் சம்பளம் 10 ஆயிரம், மைதிலியின் சம்பளம் 15 ஆயிரம், அபிராமியின் நாச்சியார் 15 ஆயிரம், சந்திரகலாவின் 16 ஆயிரம் ஆகும்.

Zee Tamil Serial actress salary
Photo Credit:

அண்ணா சீரியல் நடிகை: அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில், நித்தியா ராம், பூவிலங்கு மோகன், ப்ரீதா சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். தங்கைகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் பாசம் மிகுந்த அண்ணாக செந்தில் இதில் நடித்துள்ளார்.இதில் பரணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நித்யா ராமின் ஒரு நாள் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். அதே சீரியலில், இசக்சி ரோலில் நடித்து வரும் ப்ரீதா சுரேஷின் ஒரு நாள் சம்பளம் 12 ஆயிரம், ரத்னா வேடத்தில் நடித்து வரும் சுனிதா ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ரூபாயும், வீரா வேடத்தில் நடித்து வரும் சுசித்ராவிற்கு 10 ஆயிரமும், செல்ல கனி வேடத்தில நடித்து வரும் ஹேமா சின்ராஜூக்கு 6 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

சந்தியா ராகம்: நினைத்தாலே இனிக்கும் சீரியலில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து சுவாதி சர்மா வாங்கும சம்பளம் 22 ஆயிரம் ரூபாய். அதே சீரியலில் தமன்னா வேடத்தில் நடித்து வரும் நடிகைக்கு பத்து ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதே போல, சந்தியா ராகம் சீரியலில் மாயா ரோலில நடித்து வரும் அந்தரா ஸ்வர்ணகருக்கு 20 ஆயிரம் ரூபாயும், சாருலதா வேடத்தில் நடிக்கும் பிராணிகா தக்ஷு 8 ஆயிரம், தனாவின் சம்பளம் 15 ஆயிரம், பார்வதி 8 ஆயிரம், ஜானகியின் சம்பளம் 25 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

Zee Tamil Serial actress salary
Photo Credit:

அயலி: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் அயலி. இதில் அயலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் தேஜஸ்வினி கவுடா இவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறார். அதே சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவருக்கு 6 ஆயிரம் ரூபாயும், இந்திராவாக நடித்து வருபவருக்கு இந்திரா 20 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X