»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil
கோலிவுட்டில் நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் நீண்ட காலமாகவேமுணுமுணுக்கப்பட்டு வந்தாலும், அதைப் பற்றி நடிகர்கள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை என்பது போலத் தெரிகிறது,அவர்களது லேட்டஸ்ட் சம்பளப் பட்டியலைப் பார்த்தால்!

இப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார்.ரஜினியைப் பொருத்தவரை சம்பளம்என்பது அவருக்கு கொடுக்கப்படும் விநியோக உரிமைதான். கிட்டத்தட்ட ரூ. 10 கோடி வரை ரஜினிக்கு சம்பளமாக கிடைத்துவிடுகிறதாம்.

ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் கமல். இவரது லேட்டஸ்ட் சம்பள நிலவரம் ரூ. 5 கோடியாம். ரஜிணி பாணியில் சிலவிநியோக ஏரியாக்களை கமல் வாங்கி விடுவதால் 5 கோடிக்கும் மேலாகவே அவரது சம்பளம் வரும் என்கிறார்கள்.பெரும்பாலும் கேரள மாநில உரிமையை கமல்ஹாசனே வாங்கி விடுவாராம்.

மூத்த நடிகர்கள் வரிசையில் அடுத்த இடம் பிடிப்பவர் விஜயகாந்த். இவரது சம்பள நிலவரம் ரூ. 3 கோடி. படம் ஓடினாலும்,ஓடாவிட்டாலும் இதுதான் அவரது சம்பளம். 5 பைசாவைக் கூட குறைக்க மாட்டாராம் கேப்டன்.

சரத்குமார் சம்பளம் ரூ. 1 கோடியாக இருக்கிறது. அர்ஜூன் 1.5 கோடி வரை கேட்கிறார். மூத்த நடிகரான சத்யராஜ்தான்இப்போதைக்கு ரொம்ப சீப்பான ஆசாமி. அதாவது சம்பள விஷயத்தில். ரூ. 25 லட்சம் கொடுத்து விட்டால் போதும் சத்யராஜ்ஷூட்டிங் ஸ்பாட்டில் "டோப்பா"வோடு ஆஜராகி விடுவார். கூட 10 லட்சம் கொடுத்தால், சிபியையும் சேர்த்துக் கூட்டி கொண்டுவந்து விடுவார் என்கிறார்கள்.

இளம் தலைமுறை நடிகர்களில் பெரும்பாலானவர்கள் கோடீஸ்வர நடிகர்கள்தான். விஜய் ரூ 3 கோடி கேட்கிறார். இவர்தான் அதிகசம்பளம் வாங்கும் இளம் தலைமுறை நடிகர். தனுஷ் ரேட் ரூ. 2 கோடி. "அது ஒரு கனாக்காலம் சூப்பர் ஹிட் ஆனால் தனுஷின்சம்பளம் மேலும் உயரும் என்கிறார்கள்.

விக்ரம் ரொம்ப நாளாக சம்பளத்தை உயர்த்தவில்லை. அதே ரூ. 2 கோடியில்தான் இருக்கிறார். இருப்பினும் "அந்நியனுக்குப்பிறகு இவரது சம்பளமும் ஏறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அஜீத் சம்பளம் ரூ. 2 கோடியாக குறைந்து விட்டது. முதலில் இவரும் ரூ. 3 கோடி வரை வாங்கிக்

கொண்டிருந்தார். சூர்யா, சிம்பு, அர்ஜூன் ஆகியோரது சம்பளம் தலா ரூ. 1.5 கோடியாக உள்ளது.

2 படங்களில் மட்டுமே நடித்துள்ள ஜெயம் ரவி ரூ. 1 கோடி கேட்கிறாராம். "மழை படத்திற்குப் பிறகு சம்பளத்தை ஏற்றப்போவதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

இப்போதைய இளம் தலைமுறை நடிகர்களிலேயே சீனியரான பிரசாந்த் கோடிஸ்வர நடிகர்கள் வரிசையிலிருந்து சற்றேஇறங்கியுள்ளார். அவரது சம்பளம் ரூ.75 லட்சம் என்கிறார்கள்.

அதை விடக் கொடுமை, சரியாகக் கூட நடிக்க வராமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் ரவி கிருஷ்ணாவும் ரூ. 75 லட்சம் சம்பளமாககேட்பதுதான்.

ஸ்ரீகாந்த் ரூ. 60 லட்சம் வரை வாங்குகிறார். அதற்கு மேல் உயர்த்த, வாகான படமாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளார். வரிசையாகஅவரது படங்கள் சில ரிலீஸ் ஆகவுள்ளதால், சந்தடி சாக்கில் அவரும் சம்பளத்தை ஏற்றி விடுவார் என்கிறார்கள்.

சரி, காமடியன்களைப் பார்ப்போம். இப்போதும் வடிவேலுதான் அதிக சம்பளம் வாங்கும் காமடியன்களில் முன்னணியில்இருக்கிறார். அவரது சம்பளம் ரூ. 15 லட்சம் வரைக்கும் என்கிறார்கள். சில படங்களில் அவர் தினசரி சம்பளத்திற்கும் புக்ஆகிறாராம். சந்திரமுகியில் அவருக்குவெயிட்டான சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம். இருப்பினும் 15க்கு மேல் அவரதுசம்பளம் போவதில்லையாம் பொதுவாக.

விவேக்கின் சம்பளம் கொஞ்சம் இறங்கி விட்டது.முன்பு ரூ. 10 லட்சம் வரைவாங்கிக் கொண்டிருந்தாராம். இப்போது அதிகபட்சம்ரூ. 8 லட்சத்தைத் தாண்டுவதில்லையாம். பட வாய்ப்புகள் குறைந்தது ஒரு காரணம் என்றாலும், டிமாண்டும் குறைந்துவிட்டதுதான் அதை விட முக்கியமான காரணமாம்.

சரி, அம்மணிகளைப் பார்ப்போம். நடிகைகளைப் பொருத்தவரை இரண்டு விதமாக சம்பளம் வாங்குகிறார்களாம். சாதாரணகவர்ச்சியுடன்,வெறுமனே நடித்தால் ஒரு சம்பளம், கூடுதல் கவர்ச்சிக்கு இன்னொரு சம்பளம் என இரட்டை சம்பளமுறை இவர்கள்விஷயத்தில் அமலில் உள்ளதாம்.

நடிகைகளில் ஜோதிகாதான் இப்போது சூப்பர் ஸ்டார். ரூ. 30 லட்சமாக இவரது சம்பளம் உள்ளதாம். ஜோ கவர்ச்சி காட்டுவதில்லைஎன்பதால் இதுவே அவரது உண்மையான சம்பளமாக இருக்கக் கூடும்.

பட வாய்ப்புகளே இல்லாத நிலையிலும் ரீமாசென் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரும் ரூ.30லட்சம் சம்பளம் கேட்கிறாராம். இதுதவிர எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்ட தனியாக சில லகரங்களை கறந்து விடுகிறாராம்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பது நமீதாவாம். இவரது சம்பளம் (வெள்ளையில்) ரூ. 15 லட்சம் என்கிறார்கள். ஆனால்கருப்பில் மேலும் சில லகரங்கள் இவருக்கு வழங்கப்படுகிறதாம். திரையில் "பச்சையாக" வருவதற்கு தனி ரேட்டாம்.

சினேகா 12 லட்சம் வரைக்கும் வாங்குகிறாராம். தெலுங்கில் இது டபுளாம். சராசரியாக ரூ. 15 லட்சம் வரை இவரது சம்பளம்போகிறதாம்.

கேரளக் குட்டி கோபிகாவுக்கு ரூ. 10 லட்சம் வரை சம்பளம் தருகிறார்களாம். "கனா கண்டேனுக்குப் பிறகு சம்பளத்தைக் கூட்டும்யோசனையில் இருக்கிறாராம் சேச்சி.

ஒரு காலத்தில் ஓஹோவென சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த மீனா, இப்போது ரூ. 8 லட்சம் கொடுத்தால் நடிக்க வருகிறாராம்.கவர்ச்சி காட்டுவதாக இருந்தால் கூட ரூ. 2லட்சம் போட்டுக் கொடுக்க வேண்டுமாம். அதிகபட்சம் இவர் 10 லட்சத்தைத்தாண்டுவதில்லையாம்.

ரம்பாவுக்கு ரேட் ரூ. 5 லட்சம் என்கிறார்கள். எக்ஸ்ட்ரா கவர்ச்சிக்கு எக்ஸ்ட்ரா சம்பளம் என்கிறார்கள்.

"சீனா தானா ரகஸ்யாவின் ரேட் ரூ. 5 லட்சம். ஆனால் கருப்பில் மேலும் சில லகரங்களை வாங்கிக் கொண்டு, வஞ்சமில்லாமல்பஞ்ச பரா கோலத்தில் ஆட்டம் போடுகிறார் ரகஸ்யா.

இப்படி வாங்கிக் குவிச்சா, கோலிவுட் எப்படி அய்யா உருப்படும்?

Read more about: pay slip tamil cine actors

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil