தெலுங்குக்குப் போகும் விஜய் ஆண்டனியின் சலீம்
தமிழில் வெளியான விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருந்த சலீம் படம் தெலுங்குக்கு போகிறது.
சலீ்ம் படத்தை பாரதிராஜாவின் உதவியாளரான நிர்மல் குமார்தான் இயக்கியிருந்தார். இந்தப் படத்தைப் பார்த்த தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் பார்த்து ஆச்சரியப்பட்டாராம். இதையடுத்து இதை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் அவர். விஜய் ஆண்டனி பாத்திரத்திலும் அவரே நடிக்கப் போகிறாராம்.
நிர்மல் குமாரை இதுதொடர்பாக ஹைதராபாத்துக்கு நேரில் அழைத்த வெங்கடேஷ் அவரிடம் படத்தைப் பற்றிப் பாராட்டிப் பேசினாராம். பின்னர் தெலுங்கிலும் அவரையே இயக்குமாறு கேட்டுக் கொண்டாராம். அவரும் சரி என்று கூறி விட்டு வந்துள்ளாராம்.
நிர்மல் குமாருக்கு இப்போது தமிழிலும் கூட நிறையப் படங்கள் வருவதாக சொல்கிறார்கள். இதனால் தெம்போடு அடுத்தடுத்த படங்களைச் செய்வதிலும், நல்ல கதைகளை தேர்வு செய்வதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications












