திரிஷா என்ன அம்மனா? கோவில் திருவிழா பேனரில் அம்மன் அவதாரம்.. ரசிகர்களால் வெடித்த புதிய சர்ச்சை!

சென்னை: தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகையாக இருக்கும் த்ரிஷாவிற்கும் சர்ச்சைக்கும் 10 பொருத்தமும் பக்காவாக இருக்கும் அந்த அளவுக்கு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் தான் நடிகை திரிஷா. அவர் இன்ஸ்டாகிராமில் சின்னதாக ஒரு போஸ்ட் போட்டால் கூட அது இணையத்தில் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி விடும். அந்த அளவுக்கு த்ரிஷா சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக இருந்து வருகிறார். இந்நிலையில், த்ரிஷாவை அம்மன் போல சித்தரித்து ரசிகர்கள் வைத்துள்ள பேனர் ஒன்று இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நடிகை திரிஷாவும் சர்ச்சையும்: விஜய் அரசியலில் நுழைந்தது முதலே விஜய் மற்றும் த்ரிஷா குறித்துப் பலவிதமான வதந்திகள் பரவத் தொடங்கின. அதோடு, முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்ததும், அதற்கு ஒரு நடிகைதான் காரணம் என்ற பேச்சு எழுந்ததும், நெட்டிசன்கள் த்ரிஷாவை இதில் இழுத்து வைத்துப் பேச ஆரம்பித்தனர். முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்தது, விஜயின் பிறந்தநாளுக்கு அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து கூறியது எனத் த்ரிஷாவைச் சுற்றியுள்ள சர்ச்சைகளின் புகைச்சல் ஓய்ந்தபாடில்லை.

CM Vijay Trisha Amman

திரிஷா அம்மனா?: இந்நிலையில், தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், சேலம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அந்தப் பகுதியில் உள்ள ரசிகர்கள் சிலர் பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அந்தப் பேனரில் தமிழக முதலமைச்சர் விஜயின் படம் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே, நடிகை த்ரிஷாவை 'அம்மன்' போல கிரீடம் மற்றும் நகைகளுடன் அலங்கரித்து, நாற்காலியில் அமர்ந்திருப்பது போலச் சித்தரித்துள்ளனர்.

இந்துக்களின் மனம் புண்படாதா?: இந்த பேனரின் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில், இதைப் பார்த்த இணையவாசிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். உங்களுடைய சினிமா அலப்பறைக்கு அளவே இல்லையா? திரிஷாவை அம்மன் போல வைப்பதா? இதனால் இந்துக்களின் மனம் புண்படாதா? என்றும், எந்த சாமியாவது இப்படி கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக நாற்காலியில் உட்கார்ந்திருக்குமா? என்றும் தங்களது கண்டனக் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X