ஆட்டோவில் வந்த கூல் சுரேஷுக்கு கார் பரிசு.. சேலம் ஆர்ஆர் பிரியாணி ஓனர் செய்த தரமான செய்கை!

சென்னை: நகைச்சுவை நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான கூல் சுரேஷ்க்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் சேலம் ஆர்ஆர் பிரியாணியின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன். அதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

நடிகர் சிம்புவின் நண்பராக காதல் அழிவதில்லை படத்திலிருந்து பல படங்களில் காமெடி நடிகராக கூல் சுரேஷ் நடித்து வருகிறார். தனுஷுடன் இணைந்து திருடா திருடி, சந்தானத்துடன் பல படங்கள் என நடித்து வரும் கூல் சுரேஷ் கடந்த ஆண்டு "வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு" என திரையரங்குகளில் முதல் நாள் காட்சிக்கு சென்று விதவிதமாக புரோமோஷன் செய்ய ஆரம்பித்தார்.

cool suresh car simbu Santhanam bigg boss

எப்படியாவது லைம் லைட்டில் வர வேண்டும் என நினைத்த கூல் சுரேஷ் தொடர்ந்து வெளியாகும் அனைத்து புது படங்களையும் பார்த்து அதற்கு சப்போர்ட் கொடுக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஷங்கர் மகளுக்கு லவ் லெட்டர்: இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அந்த படத்தை பார்த்து விட்டு அதிதி ஷங்கருக்கு ஐ லவ் யூ என கூல் சுரேஷ் எழுதியது சர்ச்சையை கிளப்பியது. உடனடியாக ஷங்கர் மகள் தனது தங்கை போன்றவர் என்றும் விளையாட்டுக்காக செய்தேன் எனக் கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதன் பின்னரும் சில சர்ச்சைகளில் கூல் சுரேஷ் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளினியுடன் சர்ச்சை: ஐஸ்வர்யா ரகுபதி எனும் தொகுப்பாளினியை சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவருக்கு பிடிக்காத வகையில் அவர் கழுத்தில் மாலை போட்டு சர்ச்சையை கிளப்பினார். அந்த இடத்திலேயே கூல் சுரேஷுக்கு ஐஸ்வர்யா ரகுபதி பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் செல்ல வழி வகுத்தது.

கார் பரிசு: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வடக்குப்பட்டி ராமசாமி சமீபத்தில் வெளியான இங்க நான் தான் கிங்கு உள்ளிட்ட சந்தானம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கூல் சுரேஷ்க்கு கிடைத்தது. இந்நிலையில், அவர் ஆட்டோவில் வந்து போவதை பார்த்த சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்செல்வன் கூல் சுரேஷ்க்கு தற்போது கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

புயலில் கார் போயிடுச்சு: பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக கூல் சுரேஷ் சேர்ந்தபோது கடந்த டிசம்பர் மாதம் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலில் தனது காரும் போய்விட்டதாக ஆர் ஆர் பிரியாணி ஓனரிடம் சொன்னேன். இரண்டு நாட்கள் கழித்து வர சொன்னார், ஏதோ பிரியாணி தான் போடப் போகிறார் என நினைத்து வந்தால், உடனடியாக கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அவரது கொடை உள்ளம் ரொம்பவே பெரியது என கூல் சுரேஷ் பாராட்டியுள்ளார். சேலம் ஆர் ஆர் பிரியாணி ஓனர் தயாரிப்பில் கூல் சுரேஷ் நடித்து வருகிறாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. கூல் சுரேஷுக்கு எதுக்காக கார் பரிசு தர வேண்டும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர், காரணமில்லாமல் காரியமில்லை என்றும் இதற்கு பின்னணியில் ஏதாவது மேட்டர் இருக்கும் விரைவில் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X