90ஸ் கிட்ஸ்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி..சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய வைத்தியர் சிவராஜ்!

சென்னை: சித்த வைத்தியர் சிவகுமார் சிவராஜின் மறைவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் சினிமாவில் அவரது தாக்கம் குறித்த தகவல்களை பார்ப்போம்.

Recommended Video

மறைந்தார் சிவராஜ் சித்த வைத்தியர்... உடல்நலக்குறைவால் மரணம்!

சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம்.

90ஸ் கிட்ஸ்களுக்கு மத்தியில் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார்பெரும் பிரபலம்.

ஆண்மை குறைவுக்கு சிகிச்சை

ஆண்மை குறைவுக்கு சிகிச்சை

சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமாரை தெரியாது என்று சொல்லும் இளைஞர்கள் இருக்க முடியாது என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் பிரபலமானவர் டாக்டர் சிவராஜ் சிவகுமார்.

உயிர் பிரிந்தது

உயிர் பிரிந்தது

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் மருத்துவர் சிவராஜ் சிவகுமார். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 .5 மணி அளவில் உயிரிழந்தார்.

உடலுக்கு அஞ்சலி

உடலுக்கு அஞ்சலி

அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீரான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்களும் அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வீடியோக்கள் பெரும் பிரபலம்

வீடியோக்கள் பெரும் பிரபலம்

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஏராளமான யூட்யூப் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இவரது வீடியோக்களும் பெரும் பிரபலம்.

அன்பான பேரன்களே..

அன்பான பேரன்களே..

சித்த வைத்தியர் சேலம் சிவராஜ் சிவகுமார் தான் நிகழ்ச்சியை தொடங்கும் போதே அன்பான பேரன்களே.. மகன் போன்ற இளைஞர்களே.. உடன் பிறந்த சகோதரர்களே என்றுதான் ஆரம்பிப்பார்.

தப்பு பண்ணாதீங்கடா..

தப்பு பண்ணாதீங்கடா..

உரிமையுடன் இளைஞர்களை சின்ன வயசுல தப்பு பண்ணாதீங்கடா என அவர் திட்டும் தோரனையே தனி. அவரது தாக்கம் சினிமாவிலும் சின்னத்திரையிலும் பெருமளவு எதிரொலித்துள்ளது.

நகைச்சுவை நிகழ்ச்சிகள்

நகைச்சுவை நிகழ்ச்சிகள்

பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மருத்துவர் சிவராஜ் சிவகுமார் பேசுவது போன்றே அரை இமிட்டேட் செய்துள்ளார்கள்.. இதேபோல் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் சக நடிகர்களை ஓட்ட சித்த வைத்தியரிடம் போய் வந்தது போன்று இருக்கிறாரே என்றும் கலாய்த்துள்ளனர்.

கோவை காமராஜ்

கோவை காமராஜ்

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடிகர் சித்ரா லக்ஷ்மணன், சித்த வைத்தியர் கோவை காமராஜ் என்ற பெயரில் மருத்துவர் சிவராஜ் சிவகுமாரை போன்று பேசி நடித்திருப்பார்.

பலரும் அதிர்ச்சி

பலரும் அதிர்ச்சி

சித்ரா லக்ஷ்மணன் நடித்த காட்சி பெரும் பிரபலமானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் மரணமடைந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X