பில்லி, சூனியம், மாந்த்ரீகம், மந்திரவாதி.. சலீம் இயக்குனரின் அடுத்த அட்டகாசம்.. மிரட்டப் போறாராமே!

By

சென்னை: பில்லி, சூனியம் உள்ளிட்ட கதைகளை வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்க இருக்கிறார், 'சலீம்' இயக்குனர்.

விஜய் ஆண்டனி, அக்‌ஷா நடித்த 'சலீம்' படத்தை இயக்கியவர் என்.வி. நிர்மல் குமார். பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய

இவர் அடுத்து, அரவிந்த்சாமி நடிப்பில் சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கினார்.

நடிகர் சசிகுமார்

நடிகர் சசிகுமார்

இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டது. இதையடுத்து அடுத்து மிஸ் மேட்ச் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆனது.
இதற்கிடையே அவர் இயக்கி வரும் படம், நா நா. கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சரத்குமாருடன் இணைந்து சசிகுமார் நடிக்கிறார்.

நடிகை சித்ரா சுக்லா

நடிகை சித்ரா சுக்லா

ஹீரோயினாக சித்ரா சுக்லா நடிக்கிறார். இவர் தெலுங்கில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் ஷூட்டிங் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. சரத்குமார் அசிஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கொரோனா காரணமாகத் தடைபட்டுள்ளது.

என்.வி.நிர்மல்குமார்

என்.வி.நிர்மல்குமார்

இந்தப் படத்தை அடுத்து இயக்குனர் என்.வி.நிர்மல்குமார் ஹாரார் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது வழக்கமான பேய் கதை இல்லையாம். பில்லி, சூனியம், மாந்த்ரீகம், மந்திரவாதி என கதை செல்லும் என்று கூறப்படுகிறது. ஸ்பெஷல் எபெக்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கிறார்.

Recommended Video

தல Ajith unseen Drone Training Video • Dhaksha Team
முன்னணி நடிகை

முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை, சசி இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை தயாரித்த ரமேஷ் பி. பிள்ளை தயாரிக்கிறார். கதையில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருப்பதால், முன்னணி நடிகை ஒருவரிடம் பேசிவருகின்றனர். கொரோனா பிரச்னைகள் முடிந்த பிறகு இதன் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X