பிஞ்சிலேயே பழுத்த சல்மான் கான்: டீச்சரை பிக்கப் பண்ண செய்த காரியத்தை பாருங்களேன்
மும்பை: பள்ளியில் படித்தபோது ஆசிரியையுடன் நிறைய கடலை போட்டுள்ளதாக நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 52 வயதாகியும் இன்னும் திருமணமாகவில்லை. அவர் வாழ்வில் காதலிகள் வருவதும் போவதுமாக உள்ளார்கள். அவர் படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிசியாக உள்ளார்.
அவர் தஸ் கா தம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆசிரியை
பள்ளி காலத்தில் இந்தியர்களுக்கு ஆசிரியை மீது காதல் ஏற்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சல்மான் கான் கூறியதாவது, நான் பள்ளியில் படித்த காலத்தில் ஆசிரியையுடன் செமயாக கடலை போட்டுள்ளேன். ஆசிரியை மீது ஈர்ப்பு வராமல் இருப்பது கடினம் என்று உண்மையை தெரிவித்துள்ளார்.

சல்மான்
நான் என் பள்ளி ஆசிரியையை சைக்கிளில் வைத்து அவர் வீட்டில் டிராப் செய்துள்ளேன். அவரை முன் பக்கம் உட்கார வைக்க வேண்டும் என்பதற்காக கேரியரை கழற்றி வைத்திருக்கிறேன். நிறைய பேர் உண்மையை சொல்ல மாட்டார்கள். ஆனால் ஆசிரியை மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவருடன் கடலை போட்டேன் என்கிற உண்மையை நான் தைரியமாக சொல்வேன் என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

கமல்
சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் தஸ் கா தம் நிகழ்ச்சியில் நடிகர்கள் ஷாருக்கான், கமல் ஹாஸன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கமல் ஹாஸன் தனது விஸ்வரூபம் 2 படத்தை விளம்பரப்படுத்த கலந்து கொண்டு சல்மானுக்கு மலையாளம், தமிழ் கற்றுக் கொடுத்தார். அந்த வீடியோ வெளியாகி வைரலானது.
சல்மான் கான்
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இந்த சீசனையும் சல்மான் கான் தான் தொகுத்து வழங்க உள்ளார். அடுத்த மாதம் 12ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் 12-ன் ப்ரொமோ வெளியாகியுள்ளது. ப்ரொமோவில் சல்மான் கான் ஆசிரியர் போன்று வந்து மாணவர்களுக்கு விதிமுறைகளை சொல்கிறார்.


Click it and Unblock the Notifications











