இந்து கடவுளை அவமதித்தாரா சல்மான் கான்.. ட்விட்டரில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

மும்பை: சல்மான் கானின் தபங் 3 படம் நேற்று வெளியாகியுள்ளது. ஆனால், நாடு முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடி வருவதால், தபங் படத்தின் முதல் நாள் வசூல் பாதித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு புதிய சிக்கலாக, இந்து கடவுளை சல்மான் கான் அவமதித்ததாக புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது.

SALMAN HATES HINDU என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

தபங் 3

தபங் 3

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள தபங் 3 படம் நேற்று வெளியானது. தபங் 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட கமர்ஷியலாக பக்காவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

போராட்டத்தால் வந்த விளைவு

போராட்டத்தால் வந்த விளைவு

சல்மான் கானின் தபங் 3 படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் படத்தின் வசூலை வெகுவாக குறைத்துள்ளது. முதல் நாளில் சுமார் 22 கோடி அளவு வசூல் செய்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 30 கோடிக்கும் மேலாக தபங் 3 வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாய் திறக்கவில்லை

வாய் திறக்கவில்லை

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள் வட இந்தியாவில் பெருமளவு போராடி வரும் நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் இந்த பிரச்சனை குறித்து ஏதும் பேசவில்லை என ஷேம் ஆன் பாலிவுட் மற்றும் பாய்காட் பாலிவுட் ஹாஷ்டேக்குகளில் பாலிவுட் ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர்.

சிவலிங்கத்தை அவமதித்தாரா?

இந்நிலையில், தற்போது சல்மானுக்கு எதிராக புதிய பூகம்பம் ஒன்று கிளம்பியுள்ளது. அது என்னவென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவலிங்க சிலை ஒன்றை சல்மான் கான் அவமதித்துள்ளார் என பாலிவுட் ரசிகர்கள் SALMAN HATES HINDU ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மான் வேட்டை

ஏற்கனவே சல்மான் கான் மானை வேட்டை ஆடிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்தார். இந்நிலையில், தற்போது இந்து கடவுளை அவமதித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானி சல்மான் கான்

சல்மான் கான் பாகிஸ்தானி என்றும், அவர் இந்து கடவுள்களை மதிக்க மாட்டார் என்றும் இந்த நெட்டிசன் ட்வீட் போட்டுள்ளார்.

சல்மான் ரசிகர்கள் சப்போர்ட்

சல்மான் கான் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ பண்டிகைகளை கொண்டாடுவார் என்றும் எல்லா மதத்தினரையும் மனிதராக மதிப்பவர் என்றும் சல்மான் கான் ரசிகர்கள், SALMAN MOST SECULAR INDIAN என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் சண்டை

அக்‌ஷய் குமார் ராமரை அவமதித்ததாக எழுந்த ட்விட்டர் பிரச்சனையை தொடர்ந்து அக்‌ஷய் குமார் ரசிகர்கள் சல்மான் கான் சிவலிங்கத்தை அவமதித்தார் என இந்த ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்து - முஸ்லிம் சண்டையை ட்விட்டரிலும் தொடங்கியுள்ளனர்.

மதங்கள் கிடையாது

எனது தந்தை ஒரு முஸ்லிம், எனது தாய் ஒரு இந்து நான் ஒரு இன்சான் என சல்மான் கான் கூறிய வாசகங்களை பதிவிட்டு சல்மான் கானுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

நேற்று ரஜினி இன்று சல்மான் கான்

நேற்று ரஜினி இன்று சல்மான் கான்

குடியுரிமை திருத்த மசோதா தொடர்பாக நடைபெறும் போராட்டங்களில் வன்முறை கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு நேற்று நெட்டிசன்கள் மிகப்பெரிய அளவில் ஹாஷ்டேக்குகளை உருவாக்கி அவரை திட்டியும் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு டிரெண்ட் செய்தனர். இந்நிலையில், தற்போது சல்மான் கானுக்கு அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X