வீரம் படத்தோட பட்ஜெட்டே இவ்ளோ இல்லையேப்பா.. சல்மான் கான், பூஜா ஹெக்டே சம்பளம் எவ்ளோ தெரியுமா?

மும்பை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 21ம் தேதி சல்மான் கான், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ், பூமிகா சாவ்லா மற்றும் சிறப்பு தோற்றத்தில் ராம்சரண் நடிக்கும் கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்திற்கு நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே வாங்கியுள்ள சம்பளம் குறித்த சூடான தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடிப்பில் வெளியான வீரம் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்று அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Salman Khan and Pooja Hegde gets huge salary for Kisi Ka Bhai Kisi Ki Jaan

கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து அந்த படத்தை பாலிவுட்டில் ஃபர்ஹத் சம்ஜி என்பவர் சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டேவை வைத்து பிரம்மாண்டமான பொருட்செலவில் இயக்கி உள்ளார்.

வீரம் படத்தின் பட்ஜெட்: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, பாலா, தமன்னா, நாசர் நடிப்பில் வெளியான வீரம் படம் வெறும் 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2014ம் ஆண்டு உருவானது. அந்த படத்தில் இடம்பெற்ற ரயில் சண்டைக் காட்சி எல்லாம் இன்றளவும் தமிழ் சினிமாவில் பெருமையாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்து சல்மான் கான் நடித்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 21ம் தேதி ரம்ஜான் பண்டிகை சிறப்பு விருந்தாக இந்த படம் வெளியாக உள்ளது.

சல்மான் கான் சம்பளம்: வீரம் படத்தின் இந்தி ரீமேக்கிற்கு கிஸி கா பாய் கிஸி கி ஜான் என ரொம்பவே லெந்தான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு சல்மான் கானுக்கு மட்டும் அதிகபட்சமாக 125 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Salman Khan and Pooja Hegde gets huge salary for Kisi Ka Bhai Kisi Ki Jaan

ராஷ்மிகாவை ஓரங்கட்டிய பூஜா ஹெக்டே: சல்மான் கான் 125 கோடி ரூபாய் இந்த படத்துக்கு சம்பளமாக வாங்கும் நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே அதிகபட்சமாக 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார் என்றும் இதுதான் முதல்முறை அவர் அதிகப்படியான சம்பளம் வாங்குவது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ராஷ்மிகா மந்தனா புதுப்படங்களுக்கு 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில், பீஸ்ட் நடிகை ஃபாஸ்ட்டாக தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாரே என பாலிவுட்டில் பலரது பார்வையும் பூஜா ஹெக்டே மீதுதான் விழுந்துள்ளது.

வெங்கடேஷ் டகுபதி சம்பளம்: சமீபத்தில் வெளியான ராணா நாயுடு வெப்சீரிஸ் மூலம் குடும்ப ரசிகர்கள் காரி துப்பும் அளவுக்கு படு ஆபாசமாக வெங்கடேஷ் டகுபதி நடித்த நிலையில், இந்த படத்தில் நாசர் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். மீண்டும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படத்தில் நடித்த நிலையில், தனது பழைய சர்ச்சைகளை இந்த படத்தின் மூலம் போக்க திட்டமிட்டுள்ளார். வெங்கடேஷ் டகுபதிக்கு இந்த படத்தில் நடிக்க அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X