ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட சல்மான் கான், அனுஷ்கா சர்மா
மும்பை: ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களாக பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை அனுஷ்கா சர்மாவும் உள்ளனர் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
க்வாப்.காம்(Kwaab.com) என்ற இணையதளம் ஆன்லைனில் பிரபலமான ஆண், பெண், உணவு, இடங்கள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. சுற்றுலா என்றால் அதற்கு ராஜஸ்தான் தான் மிகவும் சிறந்த இடம் என்று பலர் கருதுகின்றனர். மேலும் இந்த சீசனை சந்தோஷமாக கழிக்க காஷ்மீர் மற்றும் கோவா தான் சிறந்தவை என்று தெரிய வந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார் தெரியுமா?

சல்மான், அனுஷ்கா
பாலிவுட் வசூல் மன்னன் சல்மான் கான் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா தான் ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் ஆகும்.

குலாப் ஜாமூன் தான் ஃபேவரைட்
இந்தியர்கள் பாரம்பரிய வங்கதேச இனிப்புகளைவிட கப் கேக்கை விரும்புகிறார்களாம். இருப்பினும் இந்திய மக்களுக்கு எப்பொழுதும் பிடித்தது என்றால் அது குலாப் ஜாமூன் தானாம்.

தென்னிந்திய உணவுக்கு அதிக கிராக்கி
கார, சாரமான தென்னிந்திய உணவை பெரும்பாலான இந்தியர்கள் விரும்புகிறார்கள்.

டிசைனர் ஆடை வந்தாலும் பாரம்பரிய உடைக்கு மவுசு
பெரும்பாலான இந்தியர்கள் டிசைனர் ஆடைகளை விரும்பினாலும் நம் பாரம்பரிய ஆடைகள் தான் ஆல் டைம் ஃபேவரைட்டாக உள்ளது.

ஷாப்பிங்னா அது லண்டன் தான்
சர்வதேச இடங்களில் ஷாப்பிங் செய்ய ஏற்ற இடம் லண்டன் தான் என்று பலர் நினைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications