Actor Salman khan: சல்மான்கான் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம்.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா
சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் படத்தை தொடர்ந்து சிறிது காலங்கள் தன்னுடைய இயக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தார் ஏஆர் முருகதாஸ். இந்நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. படத்தில் போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடித்து வருகிறார். முன்னதாக இந்த ரோலில் மிர்ணாளினி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இயல்பான தோற்றத்துடன் கூடிய ஒரு நாயகி தனக்கு தேவைப்பட்டதால் ருக்மணி வசந்தத்தை தான் தேர்ந்தெடுத்ததாக முன்னதாக பேட்டி ஒன்றில் ஏஆர் முருகதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் சல்மான் கான் லீட் கேரக்டரில் நடிக்க கிக் 2 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதைக்களம் உருவாக்கப்பட உள்ளதாகவும் வரும் மே மாதத்தில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது இது சிறிய ஷெட்யூலாக நடக்க உள்ளதாகவும் அடுத்தக்கட்ட சூட்டிங் ஜூலை மாதத்தில் துவங்கி நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை ஏஆர் முருகதாஸ் நிறைவு செய்து விடுவார் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏஆர் முருகதாஸ்: தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி நடந்து வருகிறது. படத்தில் ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த ஷெட்யூல்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் சல்மான்கான் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார் ஏஆர் முருகதாஸ். இந்த படம் கிக் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சல்மானை இயக்கும் ஏஆர் முருகதாஸ்: இந்தப் படத்தை சஜித் நாடியத்வாலா தயாரிக்கவுள்ளார். பாலிவுட்டின் சூப்பர் ஆக்டராக பார்க்கப்படும் சல்மான் கான், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கிக் 2 படத்தில் நடிக்க உள்ளது ஏராளமான எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வரும் மே மாதத்தில் துவங்க உள்ளதாகவும் சிறிய அளவிலான ஷெட்யூலாக இது இருக்கும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதத்தில் துவங்கி அடுத்தடுத்து நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்குள்ளாக சிவகார்த்திகேயனின் படத்தை ஏஆர் முருகதாஸ் நிறைவு செய்துவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
400 கோடி ரூபாய் பட்ஜெட்: சல்மான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகளவில் திட்டமிடப்பட்டுள்ளன. போர்ச்சுகல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் இதன்மூலம் படத்திற்கு சர்வதேச அளவிலான ஒரு பார்வையை கொடுக்க ஏஆர் முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆக்ஷன் களத்தில் சிவகார்த்திகேயன்: முன்னதாக ரமணா, துப்பாக்கி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளவர் ஏஆர் முருகதாஸ். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் இவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. இந்நிலையில் அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார் முருகதாஸ். இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் ஏஆர் முருகதாஸ் இணைந்துள்ள எஸ்கே 23 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்த படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாக உள்ளதாகவும் படத்தில் காமெடி இல்லாத சிவகார்த்திகேயனை பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன்: முன்னதாக விஜய் உள்ளிட்ட பல நடிகர்களை கெத்தாக காண்பித்து அதன் மூலம் ஏராளமான பாராட்டுகளை அள்ளியவர் ஏஆர் முருகதாஸ். அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளது ஏராளமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திலும் அவருக்கு சீரியசான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ராணுவ வீரராக அவர் நடித்துள்ளார். இதுபோல தற்போது எஸ்கே 23 படத்திலும் போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











