லாக்டவுன் முடியட்டும்..ஜி.வி.பிரகாஷ் பட ஹீரோயினையும் காதலரையும் திருமணத்துக்கு தள்ளிய பிரபல ஹீரோ!
மும்பை: ஜி.வி.பிரகாஷ் பட ஹீரோயினை, அவர் காதலருடன் திருமணத்துக்கு தள்ளி இருக்கிறார் பிரபல ஹீரோ.
சுமந்த் ஹீரோவாக நடித்த போனி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிர்த்தி கர்பண்டா.
பிறகு நானியின் அல மொடலைண்டி, பவன் கல்யாணின் தீன் மார் உட்பட சில படங்களில் நடித்து வந்த இவர், பிறகு கன்னடத்துக்குச் சென்றார்.

புரூஸ்லீ ஹீரோயின்
தமிழில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக புரூஸ்லீ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் சரியாக ஓடவில்லை. இதையடுத்து தமிழில், துல்கர் சல்மான் நடிக்கும் வான் படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். பின்னர் இந்திக்குச் சென்றார். அங்கு இம்ரான் ஹாஸ்மி ஜோடியாக, 'ராஷ்: ரீபூட்' என்ற படம் மூலம் அறிமுகமானார்.

புல்கிட் சாம்ராட்
பிறகு ராஜ்குமார் ராவ் ஜோடியாக, 'ஷாதி மேன் ஜரூன் ஆனா' என்ற படத்தில் நடித்தார். அடுத்து புல்கிட் சாம்ராட் ஜோடியாக வீரே கி வெட்டிங், அக்ஷய்குமாரின் ஹவுஸ்புல் 4, அனில் கபூர், ஜான் ஆப்ரஹாம், புல்கிட் சாம்ராட் நடித்த காமெடி படமான பகல்பன்டியில் நடித்தார். இப்போது பிஜோய் நம்பியார் இயக்கும் டைஷ் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதிலும் புல்கிட் சாம்ராட் ஹீரோ.

காதலில் விழுந்தார்
வீரே கி வெட்டிங் படத்தில் நடித்த போது புல்கிட் சாம்ராட்டுடன் கிர்த்தி காதலில் விழுந்தார். ஆனால், இதுபற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து டைஷ் படத்தில் நடிக்கும் இருவருக்கும், காதல் நெருக்கம் அதிகமாகி விட்டதாகக் கூறப்பட்டது. அப்போதும் எதுவும் தெரிவிக்காமல் இருந்த கிர்த்தி, பின்னர் காதலை ஒப்புக்கொண்டார்.

உண்மைதான்
இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. இதுபற்றி கிர்த்தி கூறும்போது, 'நாங்கள் டேட்டிங்கில் இருப்பது உண்மைதான். ஒவ்வொரு நாளையும் எங்களுக்கானதாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், அவரோ, நானோ இன்னும் திருமணத்துக்குத் தயாராக இல்லை. அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும்' என்று தெரிவித்திருந்தார்.

கணவன் மனைவி
இந்த லாக்டவுனில் இருவரும் ஒன்றாக வசித்துவருகின்றனர். இந்நிலையில் சல்மான் கான் இருவரையும் திருமணத்துக்கு தள்ளி இருக்கிறார். அதாவது அவர் தயாரிக்கும் படத்தில் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு புல்புல் மேரேஜ் ஹால் என்று டைட்டில் வைத்துள்ளனர். ரோகித் நய்யார் இயக்கும் காமெடி படமான இதன் ஷூட்டிங், கடந்த மாதம் தொடங்கி இருக்க வேண்டும். லாக்டவுன் காரணமாகத் தள்ளிப் போயுள்ளது.


Click it and Unblock the Notifications











