»   »  சீண்டிப் பார்த்த ரசிகரின் செல்போனை தூக்கிப் போட்டு உடைத்த சல்மான் கான்

சீண்டிப் பார்த்த ரசிகரின் செல்போனை தூக்கிப் போட்டு உடைத்த சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரசிகர் ஒருவரின் செல்போனை தூக்கிப் போட்டு உடைத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் தனது நண்பர்கள் மற்றும் சில விருந்தினர்களுடன் ரிலாக்ஸ் செய்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் சல்மான் கானிடம் தனது செல்போன் பற்றி பெருமையடித்தார்.

செல்போன்

செல்போன்

என் புதிய செல்போனை தூக்கி எறிந்தாலும் உடையவே உடையாது. வேண்டுமானால் தூக்கிப் போட்டுப் பாருங்கள் என்று ரசிகர் ஒருவர் சல்மானிடம் தெரிவித்தார்.

சல்மான்

சல்மான்

ரசிகரின் கோரிக்கையை ஏற்காமல் சல்மான் சிரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஆனால் அந்த ரசிகர் சல்மானை விடுவதாக இல்லை. மீண்டும் பெருமையடித்து செல்போனை உடைத்து தான் பாருங்களேன் என்றார்.

ரசிகர்

ரசிகர்

ரசிகரின் தொடர் தொந்தரவால் கடுப்பான சல்மான் அந்த செல்போனை வாங்கி தரையில் வீசினார் உடையவில்லை. உடனே அங்கிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து செல்போனை உடைங்க சல்மான் என்று கரகோஷம் எழுப்பினர்.

உடைத்தார்

உடைத்தார்

சல்மான் அந்த செல்போனை எடுத்து மீண்டும் வீசியும் உடையவில்லை. மூன்றாவது முறை வேகமாக வீசியபோது செல்போன் உடைந்துவிட்டது. இதை பார்த்த செல்போன் உரிமையாளர் கவலை அடைந்தார் மற்றவர்கள் சல்மானை பாராட்டினார்கள்.

கோபம்

கோபம்

சல்மான் கானுக்கு தற்போது தான் கோபம் குறைந்துள்ளது என்று பாலிவுட்டில் கூறுகிறார்கள். இந்நிலையில் ரசிகர் ஒருவர் தானாக வந்து சல்மானை கோபப்பட வைத்துள்ளார்.

English summary
Bollywood actor Salman Khan has broken a fan's cellphone after the latter insisted him to try to break it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil