Just In
- 2 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 3 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 3 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 4 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா விதிமுறைகளை மீறுவதா? வெளிநாட்டில் இருந்துவந்த நடிகர் சல்மான் கான் சகோதர்கள் மீது வழக்கு!
மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக நடிகர் சல்மான் கானின் சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொற்று காரணமாக, உயிரிழந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் அதிகரித்து வந்தனர்.

சரிந்து வருவதாக
சமீபகாலமாக இந்த எண்ணிகை சரிந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது. இருந்தாலும் மக்களிடம் கொரோனா பயம் போகவில்லை. இதற்கிடையே, இங்கிலாந்தில் பரவி உள்ள உருமாறிய புதிய வகை கொரோனா பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

துபாய், பிரிட்டன்
இந்த புதிய வகை கொரோனா, உலக நாடுகளுக்கும் பரவி வருகிறது. அங்கிருந்து பிற நாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலம் அந்தந்த நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது. இதனால் துபாய், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கடும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

வழக்குப் பதிவு
சோதனையில் பாசிட்டிவ் இல்லை என்றாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த கொரோனா விதிமுறைகளை நடிகர் சல்மான் கானின் சகோதரர்கள் மீறி இருப்பதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சோதனை
நடிகர் சல்மான் கானின் சகோதரர்கள் அர்பாஸ் கான், சோஹைல் கான். சோஹைலின் மகன் நிர்வான் கான் ஆகிய மூன்று பேரும் டிசம்பர் 25 ஆம் தேதி துபாயிலிருந்து மும்பை வந்தனர். அவர்களுக்கு ஏர்போர்ட்டில் கொரோனா சோதனை
நடத்தப்பட்டது. கொரோனா இல்லை என்று தெரியவந்தது.

போலீசில் புகார்
அவர்களிடம் ஒரு வாரம் ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அவர்கள் அதை மீறி வீட்டுக்குச் சென்றுள்ளனர். இது மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதையடுத்து கர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

தாஜ் ஓட்டல்
கொரோனா விதிமுறைகளை மீறியதாக, கர் போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், அவர்கள் இப்போது மும்பையில் தாஜ் நட்சத்திர ஓட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.