Salman Khan: சல்மான் கானுக்கே சாவு பயத்தை காட்டிட்டாங்க.. உஷாரா மனுஷன் என்ன பண்ணாரு தெரியுமா?
மும்பை: இந்தியளவில் இவர் படங்கள் வெளியானாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை தான். அந்த அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் செல்வாக்கை எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் இழக்காத நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் ஒன்று பரபரப்பை கிளப்பியது.
எதற்கும் அஞ்சாதவராக இருந்து வந்த முரட்டு சிங்கிள் சல்மான் கான் இந்த முறை அந்த கொலை மிரட்டலை ஏதோ வேலையில்லாத ஹேட்டர்கள் பார்த்த வேலை என ஒதுக்கி விடாமல் கொஞ்சம் சீரியஸாகவே எடுத்துக் கொண்டார் என்றே பாலிவுட்டில் பெரும் பேச்சு நிலவி வருகிறது.

தனது பாதுகாப்புக்காக நடிகர் சல்மான் கான் தற்போது செய்துள்ள அந்த விஷயம் தான் அனைவரது கவனத்தையும் அவர் பக்கம் திருப்பி இருக்கிறது.

வீரம் இந்தி ரீமேக்: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த வீரம் படத்தின் இந்தி ரீமேக் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. சல்மான் கான், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ் டகுபதி நடித்துள்ள இந்த படத்தின் ஸ்பெஷலான எண்டம்மா பாடலுக்கு நாட்டுக் கூத்து பாட்டுக்கு ஆட்டம் போட்டு ஆஸ்கரையே வாங்கித் தந்த ராம்சரண் நடனமாடி உள்ளார்.
சமீபத்தில் அதன் வீடியோ பாடலே வெளியாகி பூஜா ஹெக்டேவும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தொடை தெரிய ஆட்டம் போட்டதை பார்த்து ரசிகர்கள் சில்லறைகளை சிதற விட்டனர்.
பூஜா ஹெக்டேவுடன் காதல்: தென்னிந்திய படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்த நடிகை பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக மாறிவிட்டார். சல்மான் கானுக்கு ஜோடியாக அவர் நடித்து வரும் நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து விட்டதாக பாலிவுட்டில் பயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சல்மான் கானும், பூஜா ஹெக்டேவும் பட ப்ரோமோஷனுக்கு உதவுகிறதே என இதுவரை சைலன்ட்டாகவே உள்ளனர்.

கொலை மிரட்டல்: நடிகர் சல்மான் கானுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் உள்ளனரோ அதே அளவுக்கு ஹேட்டர்களும் உள்ளனர். சமீபத்தில், நடிகர் சல்மான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டலும், நடிகர் சல்மானுக்கு தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டலும் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புல்லட் ப்ரூஃப் கார்: இந்நிலையில், வெளியே செல்லும் போது விரோதிகளால் தனக்கு எந்த பாதிப்பும் ஆகிவிடக் கூடாது என்கிற கவலையில் தற்போது புல்லட் ப்ரூஃப் கொண்ட Nissan Patrol SUV காரை வாங்கி இருக்கிறாராம். சமீபத்தில், அந்த காரில் தனது பாதுகாவலர்களுடன் வெளியே சல்மான் கான் வந்த செய்தி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
முன்னதாக Land Cruiser LC200 எனும் புல்லட் ப்ரூஃப் காரை வைத்திருந்த சல்மான் கான் தற்போது அதை விட அதிக B6, B7 பாதுகாப்பு கொண்ட புல்லட் ப்ரூஃப் காரை பல கோடிகள் கொடுத்து வாங்கி உள்ளதாக கூறுகின்றனர். வரும் ஏப்ரல் 21ம் தேதி பூஜா ஹெக்டேவுடன் அவர் இணைந்து நடித்துள்ள Kisi Ka Bhai Kisi Ki Jaan படம் திரைக்கு வருகிறது. அடுத்ததாக டைகர் 3 படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியான ஷாருக்கானின் ஜவான் படத்திலும் டைகராக வந்து மாஸ் காட்டியிருந்தார் சல்மான் கான்.


Click it and Unblock the Notifications











