வீரம் ரீமேக் கிசி கா பாய் கிஸி கி ஜான் மும்பையில் ரத்து…சல்மான் எடுத்த அதிரடி முடிவு!

மும்பை : வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான கிசி கா பாய் கிஸி கி ஜான் படத்தை சல்மான் கான் ரத்து செய்தார்.

இப்படத்தில்வெங்கடேஷ் டக்குபதி, பூஜா ஹெக்டே, பூமிகா சாவ்லா, அபிமன்யு சிங், ராகவ் ஜூயல், ஜாஸ்ஸி கில், சித்தார்த் நிகம், ஷெஹ்னாஸ் கில் மற்றும் பாலக் திவாரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

Salman Khan Canceled Kisi Ka Bhai Kisi Ki Jaan Screening In Mumbai

சல்மான் கான் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தை ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கி உள்ளார்.

வீரம் : 2014ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் வீரம். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கலக்கியது. அத்துடன் காமெடி, ஆக்‌ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வீரம் படம் இருந்தது. இப்படத்தில் வேட்டி சட்டையில் கிராமத்து கெட்டப்பில் அதிரடியாக தோன்றி கைத்தட்டலை பெற்றார் அஜித்.

தெலுங்கில் ரீமேக் : வீரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படம் தெலுங்கில் கட்டமராயுடன் என்ற பெயரில் ரீமேக்கானது, அதில் பவன் கல்யாண் நடித்திருந்தார். தமிழை போல் தெலுங்கிலும் பல மாஸ்ஸான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கிலும் வெற்றிபெற்று வசூலை அள்ளியது.

கிசி கா பாய் கிசி கி ஜான் ரத்து : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெற்றி பெற்ற இப்படம் இந்தியில் கிசி கா பாய் கிசி கி ஜான் ரீமேக்காகி, ஏப்ரல் 21ந் தேதியான இன்று உலகம் முழுவம் வெளியாகி உள்ளது. முன்னதாக நேற்று கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட இருந்த நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் மனைவி பமீலா சோப்ரா நேற்று உயிரிழந்த நிலையில், இந்தி பிரபலங்கள் அதில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தின் சிறப்பு காட்சியை சல்மான் கான் ரத்து செய்தார்.

பமீலா சோப்ரா உயிரிழந்தார் : 74 வயதான பமீலா சோப்ரா பாடகி, எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பல யாஷ் ராஜ் திரைப்படங்களின் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். கடைசியாக இவர், தி ரொமான்டிக்ஸ் என்ற ஆவணப்படத்திற்காக பாடி உள்ளார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பமீலா சோப்ரா கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X