ஶ்ரீதேவி உடலை பார்த்து கதறி அழுத சல்மான் கான்!
Recommended Video

மும்பை : திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார்.
அதன்பின், அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு 10 மணி அளவில் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஶ்ரீதேவியின் உடலை பார்த்த பாலிவுட் நடிகரும், ஶ்ரீதேவியின் நெருங்கிய நண்பருமான சல்மான் கான் கதறி அழுதுள்ளார்.

ஶ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாய் நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு அவரது உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான அனுமதி கடிதத்தை நேற்று துபாய் போலீசார் தற்போது வழங்கினர்.

இறுதி ஊர்வலம்
அதற்குபின் அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு நேற்று இரவு 10 மணி அளவில் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரின் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர்கள் இறுதி அஞ்சலி
கடைசியாக ஸ்ரீதேவியின் உடலை பார்த்து அஞ்சலி செலுத்த பல பாலிவுட் முன்னணி நடிகர்கள் மும்பையில் கூடிவிட்டனர். ஸ்ரீதேவி உடல் வந்து அரை மணி நேரத்திற்கெல்லாம் நடிகர் சல்மான் கான் அஞ்சலி செலுத்த வந்தார்.

கதறி அழுத சல்மான்
நடிகை ஸ்ரீதேவியின் பூத உடலைப் பார்த்து பாலிவுட் நடிகர் சல்மான் கதறி அழுதுள்ளார். அவர் ஸ்ரீதேவியின் நெருங்கிய நண்பர். ஸ்ரீதேவியின் வீட்டுக்கு வரும்போதே கலங்கிய கண்களுடன் வந்துள்ளார் சல்மான் கான்.


Click it and Unblock the Notifications











