கடும் கோபம்.. வேற தொகுப்பாளரை பார்த்துக்கோங்க.. பிக் பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரபல நடிகர்
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவதாக நடிகர் சல்மான் கான் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக் பாஸ். இந்தியில் இந்நிகழ்ச்சி 13 சீசன்களை கண்டுள்ளது. முதல் சீசனில் இருந்து இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது நடிகர் சல்மான் கான் தான்.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட இந்தி பிக் பாஸில் பல மடங்கு சர்ச்சைகள் வெடிக்கும். இந்த சீசனிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை.

சர்ச்சைக்கு பஞ்சமில்லை
அரைக்குறை ஆடை, செக்ஸ் காட்சிகள் என இந்த சீசன் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் நிகழ்ச்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

டிஆர்பி இல்லை
என்ன தான் அதிக சர்ச்சைகள் இருந்தாலும், கடந்த சீசன்களை ஒப்பிடும் போது இந்த சீசனின் டிஆர்பி மிகவும் குறைவு தான். எனவே டிஆர்பியை உயர்த்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்காகவே நிகழ்ச்சியில் பல பரபரப்பு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

சல்மானின் அறிவிப்பு
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவதாக நடிகர் சல்மான் கான் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புரொமோவில், போட்டியாளர்கள் மீது கடும் கோபத்தை காட்டுகிறார் சல்மான். பின்னர் வேறு யாரையாவது வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு, கோட்டை கழட்டி வீசிவிட்டு செல்கிறார் அவர்.

ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த புரொமோவால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சல்மான் சொல்வது உண்மைதானா. அல்லது டிஆர்பிக்காக இப்படி பேசுகிறாரா எனும் குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இது முதல்முறையல்ல
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சல்மான் கோபத்துடன் அறிவிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பலமுறை இப்படி செய்திருக்கிறார். ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கும் முன்னரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவது குறித்து யோசிப்பேன் என அவர் ஒரு பேட்டியில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அற்புதமான பயணம்
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு அற்புதமான பயணம் என்பதால் அதில் இருந்து தன்னால் விலக முடியவில்லை என்றும் சல்மான் கூறியிருந்தார். ஒரு சில போட்டியாளர்களை தவிர, மற்ற அனைவரும் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்கிறார்கள் என சல்மான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் சகஜம்
அதை வைத்துப் பார்க்கையில் இதுவும் டிஆர்பிக்காக வெளியிடப்பட்ட புரொமோவாகத் தான் இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. தமிழிலும் கூட புரொமோக்களில் பரபரப்பாக காட்டிவிட்டு பின்னர் நிகழ்ச்சியில் ஒன்றுமே இருக்காது. இதுவும் அது போலத்தான் என பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











