ஐஸ்வர்யா ராய் வீட்டு துக்கத்தில் பங்கேற்காத சல்மான் கான்: எல்லாம் 'அந்த' விஷயமா?
மும்பை: ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய்க்காக நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் நடிகர் சல்மான் கான் கலந்து கொள்ளவில்லை.
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் கடந்த 18ம் தேதி காலமானார்.
இதையடுத்து அவரின் நினைவாக மும்பையில் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார் ஐஸ்வர்யா ராய். பாலிவுட் பிரபலங்கள் பலர் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சல்மான்
ஐஸ்வர்யா ராய் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் சல்மான் கான் கலந்து கொள்ளவில்லை. பழைய விஷயங்களை மனதில் வைத்து தான் சல்மான் கூட்டத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

கிருஷ்ணராஜ் ராய்
சல்மான் கான் வேணாம்மா, அவர் உனக்கு செட்டாக மாட்டார் என்று ஐஸ்வர்யா ராயிடம் கூறியவர் கிருஷ்ணராஜ் ராய். தந்தை செல்லமான ஐஸும் அவரின் பேச்சை கேட்டு சல்மானை பிரிந்தார்.

ஐஸ்வர்யா
அப்பா கிருஷ்ணராஜ் ராயின் பேச்சை கேட்டு தான் ஐஸ்வர்யா ராய் தன்னை பிரிந்தார் என்பது சல்மான் கானுக்கும் தெரியும். இதை சல்மான் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மருமகன்
பல தொடர்புகள் வைத்திருந்த தன்னை போன்று ஒருவரை மருமகனாக்க எந்த தந்தை தான் விரும்புவார் என்று சல்மான் கான் ஒருமுறை தெரிவித்திருந்தார்.

பிரிவு
சல்மான் என் தந்தையிடம் தவறாக நடந்து கொண்டதால் அவரை பிரிகிறேன் என்று முன்பு கூறினார் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராய் இப்படி தான் செய்வார் என்றும் சல்மானுக்கு தெரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications