Tiger 3 Ticket booking: சல்மான் கானை இனியும் நம்ப முடியாது.. தீபாவளிக்கே டிக்கெட் புக்கிங் டல்?
மும்பை: இயக்குநர் மணிஷ் சர்மா இயக்கத்தில் 300 கோடி பட்ஜெட்டில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகி உள்ள டைகர் 3 திரைப்படம் ஷார்ப்பா தீபாவளிக்குத் தான் ரிலீஸ் ஆவேன் என நாளை நவம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் படங்கள் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் அடித்தன. சன்னி தியோலின் கதர் 2 திரைப்படம் பாலிவுட்டில் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், சல்மான் கானின் டைகர் 3 தீபாவளிக்கு வெளியாகி 1000 கோடி வசூல் ஈட்டுமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங்கில் பெரியளவில் தொய்வு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்தியாவில் ஹைப்பே இல்லை: நடிகர் ஷாருக்கானை போல தென்னிந்தியா பக்கம் வந்து எந்தவொரு புரமோஷனையும் சல்மான் கான் செய்யவில்லை. அதன் காரணமாக நாளை அப்படியொரு படம் வெளியாகிறது என்பதே யாருக்கும் தெரியாத நிலை தான் உள்ளது.
தொடர் ஃபிளாப்: கடந்த சில ஆண்டுகளாக சல்மான் கான் நடித்து வரும் படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்ததே இப்படி பாக்ஸ் ஆபிஸில் டிக்கெட் புக்கிங் ஹைப்பே இல்லாமல் இருக்க காரணம் என்கின்றனர். பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே மற்றும் வீரம் படத்தின் இந்தி ரீமேக் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை சோதித்த நிலையில், சல்மான் கான் படத்திற்கு விமர்சனம் பாசிட்டிவாக வந்தால் பார்க்கலாம் என பாலிவுட் ரசிகர்களே சைலன்ட் மோடில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிக்கெட் புக்கிங் குறைவு: பிவிஆர் மற்றும் சினிபொலிஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஷாருக்கானின் ஜவான் 5.57 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன. பதான் திரைப்படம் 5.56 லட்சம் டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டன. கேஜிஎஃப் இந்தி 5.5 லட்சமும், பிரம்மாஸ்திரா 3 லட்சம் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில், சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் வெறும் 2.17 லட்சம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டவல் ஃபைட் தான் காப்பாத்தணும்: டைகர் 3 டிரெய்லரில் சல்மான் கான் அத்தனை ஸ்டன்ட் செய்தாலும், கத்ரீனா கைஃப் வெறும் டவலை கட்டிக் கொண்டு செம கவர்ச்சியாக போடும் அந்த சண்டைக் காட்சி தான் தீயாக பரவியது. அதை பார்க்கத்தான் ரசிகர்கள் படத்திற்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. word of mouth பிளாக்பஸ்டர் என வந்தால் கூட வார நாட்களில் படத்தின் வசூல் டல்லடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











