twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தென்னிந்திய ரீமேக் படங்களுக்கு நோ சொல்லும் சல்மான்...காரணம் இது தானாம்

    |

    மும்பை : சமீப காலமாக தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் ஆகும் படங்கள் பலவும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. ரீமேக் படங்கள் என்பது தற்போது அனைத்து மொழிகளிலும் சர்வ சாதாரணமாகி விட்டது.

    பிளாக் விடோ கதாபாத்திரத்தை ஆபாசமாக சித்தரித்த ஒரே மார்வெல் படம் அது தான்.. ஸ்கார்லெட் சாடல்!பிளாக் விடோ கதாபாத்திரத்தை ஆபாசமாக சித்தரித்த ஒரே மார்வெல் படம் அது தான்.. ஸ்கார்லெட் சாடல்!

    இப்படி ரீமேக் செய்யப்படும் படங்களும் பிளாக்பஸ்டர் படங்களாக ஆவதால் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் மெகாஹிட் படங்களை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி தென்னிந்திய மொழி படங்களின் இந்தி ரீமேக்கில் அதிகம் நடித்தவர் சல்மான் கான் தான்.

    மாஸ்டர் ரீமேக்கில் சல்மான் கான்

    மாஸ்டர் ரீமேக்கில் சல்மான் கான்

    தற்போது சமீபத்தில் ஹிட்டான 2 தென்னிந்திய மொழி படங்களின் ரீமேக்கில் நடிக்க சல்மான் கானிடம் பேசப்பட்டுள்ளது. அதில் ஒன்று விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக். இந்த படம் இந்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் பட தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்.

    கதையை மாத்திட்டு வாங்க

    கதையை மாத்திட்டு வாங்க

    ஆனால் இந்த கதையை முற்றிலும் மாற்றி, புதிய கதையாக உருவாக்கும்படி படத் தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளாராம் சல்மான் கான். இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்கள், கதையை மாற்றி எழுதினால் அது வேறு படம் போல் ஆகி விடும். மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பு கிடைக்காதே என நினைக்கிறார்கள்.

    சல்மானை கவர்ந்த ஜெடி கேரக்டர்

    சல்மானை கவர்ந்த ஜெடி கேரக்டர்

    சல்மான் கானின் இந்த முடிவு பற்றி அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, இனி எப்போதும் தென்னிந்திய ரீமேக் படங்களில் நடிக்க சல்மான் கான் விரும்பவில்லையாம். தனது முடிவுல் அவர் தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் மாஸ்டர் படத்தில் ஜெடி.,யின் கேரக்டர் அவருக்கு மிகவும் பிடித்து போய் விட்டதாம்.

    ஆர்வமாக தான் இருக்கேன்

    ஆர்வமாக தான் இருக்கேன்

    அந்த கேரக்டர் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு விட்டது. இதுவரை குடிகார மாஸ்டர் வேடத்தில் தான் நடித்ததில்லை என்பதால், இந்த கேரக்டரில் நடிக்க சல்மான் கான் ஆர்வமாக இருக்கிறாராம்.

    கன்டிஷனுக்கு இதுதான் காரணமா

    கன்டிஷனுக்கு இதுதான் காரணமா

    ஆனால் புதிய கதையாக மாற்றி கொண்டு வர வேண்டும் என கன்டிஷன் போட்டுள்ளாராம். இதற்கு காரணம், பிறகு மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்படும் படங்கள் அப்பட்டமாக காப்பி செய்யப்படுவதால், பாலிவுட்டில் அது கடும் விமர்சனங்களை சந்திப்பது தானாம்.

    பாலிவுட்டை சரி செய்ய போறாராம்

    பாலிவுட்டை சரி செய்ய போறாராம்

    அதனால் பாலிவுட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சல்மான் கான் கூறுகிறாராம். விஜய் கேரக்டரின் பர்சனாலிட்டி போன்றவற்றில் மாற்றம் செய்து, புதிய கதை போல் மாற்றி இந்த படத்தை இயக்கும் படி சல்மான் கான் கோரிக்கை வைத்துள்ளாராம்.

    English summary
    Salman has asked the writers to rework the story and give it a completely new touch.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X