ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு மாரடைப்பு: உடனே உதவிய சூப்பர் ஸ்டார்
மும்பை: தபாங் 3 படத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் சல்மான் கான் அவருக்கு உதவி செய்துள்ளார்.
தபாங், தபாங் 2 படங்களை அடுத்து தற்போது தபாங் 3 படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான். சல்மான் கான் தயாரித்து நடிக்கும் இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார்.

போலீஸ் அதிகாரியான சல்மான் கான் வேலை செய்யும் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக நடித்து வருபவர் பாண்டே. அவருக்கு அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.
இந்நிலையில் பாண்டேவின் நிலை குறித்து சல்மான் கானுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் உடனே தனது ஆட்களை பாண்டே அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி நிதியுதவி செய்துள்ளார்.
மேலும் பாண்டேவை அவ்வப்போது போய் பார்த்துவிட்டு வருமாறு தனது ஆட்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பிசியாக இருக்கும் நிலையிலும் சல்மான் கான் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு உதவி செய்து வருவதை பார்த்து அனைவரும் அவரை பாராட்டுகிறார்கள்.
தன்னுடன் படங்களில் நடித்தவர்கள், நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்று தெரிந்தால் முதல் ஆளாக உதவி செய்பவர் சல்மான் கான். முன்னதாக தனது படத்தில் நடித்த நடிகை தனது குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில் அவரின் மருத்துவ செலவை ஏற்றார் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
தபாங் 3 படத்திற்காக சல்மான் தனது உடல் எடையை 5 முதல் 10 கிலோ வரை குறைக்கப் போகிறாராம். அதற்காக சிறப்பு ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்கிறார். தான் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை சல்மான் கான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் தனது குடும்பத்தாரின் வீடியோக்களையும் வெளியிடுகிறார்.
தபாங் 3 படத்தில் சல்மானின் தம்பி அர்பாஸ் கானும் நடிக்கிறார். மேலும் திருமணமாகாமல் 3 வயது குழந்தைக்கு தாயாக இருப்பதாக அண்மையில் பேட்டி அளித்து அதிர வைத்த மாஹி கில்லும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் தபாங் 3 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











