»   »  டீ குடிக்கக் கூட காசு இல்லாமல் அல்லாடிய நடிகையின் மருத்துவ செலவை ஏற்ற சல்மான்

டீ குடிக்கக் கூட காசு இல்லாமல் அல்லாடிய நடிகையின் மருத்துவ செலவை ஏற்ற சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகை பூஜாவுக்கு உதவிய சல்மான் கான்- வீடியோ

மும்பை: டீ குடிக்கக் கூட கையில் காசு இல்லாமல் மருத்துவமனையில் அனாதை போன்று இருந்த நடிகை பூஜா தத்வாலுக்கு சல்மான் கான் உதவி செய்துள்ளார்.

1995ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான வீர்கதி படத்தில் நடித்த பூஜா தத்வாலுக்கு காச நோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் அவரை கைவிட்டனர்.

மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பூஜா.

உதவி

உதவி

தனியார் மருத்துவமனையில் சேர, டீ குடிக்கக் கூட காசு இல்லாமல் அல்லாடிய பூஜா சல்மான் கான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். அவர் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.

நிதியுதவி

நிதியுதவி

பூஜாவின் பரிதாப நிலை குறித்து அறிந்த சல்மான் கான் அவரின் மருத்துவ செலவு முழுவதையும் ஏற்றுள்ளார். மேலும் அவருக்கு உடைகள், பழங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

தனது மாற்றாந்தாய் ஹெலனை பூஜாவின் விஷயங்களை கவனித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார் சல்மான். சல்மானின் இந்த செயல் குறித்து அறிந்த ரசிகர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர்.

வாழ்க்கை

வாழ்க்கை

தனது நோய் குணமான பிறகு தன் சொந்தக் காலில் நிற்கப் போவதாக பூஜா தெரிவித்துள்ளார். மேலும் உரிய நேரத்தில் தனக்கு உதவியுள்ள சல்மான் கானுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Salman Khan has helped actress Pooja Dadwal who acted in his film Veergati. Pooja is abandoned by her family after she was diagnosed with TB.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X