சல்மானின் அடுத்தடுத்த புதுமுக நாயகிகள்.. தொடரும் காதல் சர்ச்சைகள்!

மும்பை: சல்மான் கான், முன்னணி நடிகையருடன் நடிப்பதை விட, புதுமுக நடிகையருடன் நடிப்பதையே அதிகம் விரும்புவார். தன் படங்களில் அறிமுகமாகும் நடிகையருடன், அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார், அவர்.

இதுவரை நக்மா, ரவீணா டாண்டன்,ரேவதி, பூமிகா சாவ்லா,சரீன் கான், கத்ரீனா கைப்,சோனாக்‌ஷி சின்கா மற்றும் சினேகா உல்லால் உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார். அவர்களில் சினேகா உல்லால் நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் காதல் தோல்விக்கு பிறகு அவருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் சினேகா அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதே போன்று நடிகை கத்ரினாவுடன் இருந்த பல வருட காதலும் முறிந்தது.

salman khan introduces new heroine

சல்மான் நடிப்பில் வெளியாகவுள்ள, தபாங் - 3 படத்தில், சாயி மஞ்ச்ரேகர் என்ற புதுமுகத்தை களமிறக்கியுள்ளார். சாயி, பிரபல நடிகரும், இயக்குனருமான மகேஷ் மஞ்ச்ரேகர், நடிகை மேதா தம்பதியின் மகள். இதே போன்றே நடிகை சோனாக்‌ஷியும் நடிகர் மற்றும் அரசியல்வாதியான சத்ருகன் சின்காவின் மகளாவார்.சல்மான் கானின் அடுத்தடுத்த படங்களில், சாயி மஞ்ச்ரேகரை, இனி எதிர்பார்க்கலாம்.

salman khan introduces new heroine

தபாங் திரைப்படம் தான் தமிழில் STR நடிப்பில் 'ஒஸ்தி’ யாக வெளியானது. இதில் 3-வது பாகமே தற்போது வெளியாகவுள்ளது. அப்போது பரபரப்பாக பேசப்பட்ட STR தற்போது சத்தமின்றி இருக்கிறார். ஆனால் சல்மான்கான் அதே பரபரப்பை இப்போதும் மெயின்டெயின் செய்கிறார்.
salman khan introduces new heroine

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X