twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார் டிவைர் உட்பட 3 பேருக்கு கொரோனா.. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பாலிவுட் ஹீரோ சல்மான் கான்!

    By
    |

    மும்பை: தனது கார் டிரைவர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, நடிகர் சல்மான் கான் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

    கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிலும் இந்த வைரஸால் அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிகிச்சை பெறுவோர்

    சிகிச்சை பெறுவோர்

    இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 89 லட்சத்து 58 ஆயிரத்து 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 83 லட்சத்து 83 ஆயிரத்து 602 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 303 ஆக இருக்கிறது.

    பாதிப்பு ஏற்படுத்தியது

    பாதிப்பு ஏற்படுத்தியது

    கொரோனாவுக்கு இந்தியாவில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 578 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, மகாராஷ்டிராவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ், சினிமா பிரபலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், ஜெனிலியா, தமன்னா, நிக்கி கல்ராணி, ஜெனிலியா உட்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    சல்மான் டிரைவர்

    சல்மான் டிரைவர்

    இந்நிலையில், பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் கான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடைய கார் டிரைவர் அசோக் மற்றும் அவரிடம் பணியாற்றும் இரண்டு பேருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் உறுதியானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்னும் 14 நாள்

    இன்னும் 14 நாள்

    இதனால் நடிகர் சல்மான் கான் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் . கொரோனா தொடர்ந்து பரவாமல் தடுக்க, அவர் குடும்பத்தினரும் இன்னும் 14 நாள் மும்பை பாந்த்ரா வீட்டில் தனிமைப் படுத்தப்படுகின்றனர். சல்மானும் அவர் குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும் ரிசல்ட்டுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Salman Khan has decided to go into self-isolation after two of his staff members and his driver tested positive for coronavirus.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X