ஹாலிவுட் போக எனக்கு ஆசை இல்லை.. அதற்கு பதில் அந்த இடத்துக்கு போவேன்.. சல்மான் கான் நச் பதில்!

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சல்மான் கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். மேலும் சமீப காலமாக தமிழ் படங்களை ரீமேக் செய்து நடிக்க அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டு உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சல்மான் கான். 58 வயதாகும் சல்மான்கான் பல்வேறு முன்னணி நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் இதுவரை ஒருவரை கூட அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

Salman Khan Atlee AR Murugadoss Rashmika Mandanna Sun Pictures

கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து விடலாம் என்கிற முடிவில் சல்மான் கான் இருந்து வருவதாக கூறுகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் பலர் அடுத்ததாக ஹாலிவுட் செல்ல முயற்சித்து வரும் நிலையில், தனக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை என சல்மான் கான் அதிரடியாக கூறியுள்ளார்.

ஹாலிவுட் ஆசை: உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள அனைத்து நடிகர்களுக்கும் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசை ஏற்படுவது வழக்கம்தான். தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஆங்கில படத்தில் நடித்த நிலையில் நெப்போலியன், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகைகள் பலர் ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக நடித்து அசத்தி உள்ளனர். ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, அனில் கபூர், சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.

தென்னிந்தியாவுக்கு செல்வேன்: நடிகர் சல்மான் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹாலிவுட்டுக்கு செல்ல ஆசை இல்லை என்றும் சில நடிகர்கள் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு செல்கின்றனர். நான் அப்படி வேறு இண்டஸ்ட்ரிக்கு சென்று படம் செய்ய வேண்டுமென்றால் தென்னிந்தியாவுக்கு சென்று விடுவேன். அங்கே தான் நல்ல கதைகள் மற்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படங்கள் உருவாகி வருகின்றன என சல்மான் கான் கூறியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்: சல்மான் கான் தற்போது ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். அந்த படத்தைத் தொடர்ந்து அடுத்து அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், அஜித் நடித்த வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த சல்மான் கான் அடுத்து மாஸ்டர் பட ரீமேக்கிலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லீ படம்: ஷாருக்கானை இயக்கிய அட்லீ அல்லு அர்ஜுனை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதிக சம்பளம் கேட்டதால், சன் பிக்சர்ஸ் தற்போது சல்மான் கானை அந்த படத்தில் நடிக்க வைக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர். அடுத்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்கு சிக்கந்தர் படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பார் என தெரிகிறது. ஷாருக்கானுக்கு ஜவான் என்கிற பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த அட்லீ சல்மான் கானுக்கும் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை கொடுப்பார் என தெரிகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X