»   »  ஐயூலியா வான்டரை மணக்கிறார் சல்மான் கான்?

ஐயூலியா வான்டரை மணக்கிறார் சல்மான் கான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட்டில் 50 வயதைக் கடந்த பிறகும் கட்டை பிரம்மச்சாரியாகத் திரியும் சல்மான் கான் விரைவிலேயே தனது பேச்சுலர் அந்தஸ்தை இழக்கப் போகிறார்.

ஆம்... நீண்ட நாட்களாக தான் ரகசியமாகக் காதலித்து வரும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை மணக்கப் போகிறார். அவர் பெயர் ஐயூலியா வான்டர்.

Salman Khan to marry Iulia Vantur?

ஐயூலியா வான்டர் ருமானியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர். பல நிகழ்ச்சிகளில் சல்மான்கானின் தோளைக் கட்டிக் கொண்டு நின்றபடி காட்சியளித்துள்ளார்.

பாலிவுட்டில் பல நடிகைகளுடன் இணைத்துப் பேசப்பட்டாலும், சல்மானின் நீண்ட கால தோழி இவர்தான் என்கிறார்கள். 2002-ம் ஆண்டிலிருந்தே இருவரும் நெருக்கமாகப் பழகி வருகிறார்களாம்.

விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்களாம். விரைவில் தன்னை மாலையும் கழுத்துமாகப் பார்க்க வேண்டும் என்று வயதான தாய் விரும்புவதால், இந்த முடிவுக்கு வந்திருக்கிறாராம் சல்மான்கான்.

English summary
According to reports, Bollywoods long time Bachelor Salman Khan is going to marry his long term girl friend Iulia Vantur.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil