சிவகார்த்திகேயன் ரொம்ப ஸ்டைலான ஹீரோ தான்-சல்மான் கான்

சென்னை: ஹீரோ படத்தின் டீசரை பார்த்து பாராட்டிய பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான், தானே விரும்பி கேட்டு டீசரை வெளியிட்டார் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் அதிபர் கோட்டபாடி ராஜேஷ் கூறினார். அதோடு, படத்தின் ஸ்டைலான அம்சங்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் பாராட்டினார் என்று தெரிவித்தார்.

தபாங் 3 படத்தின் புரமோஷனல் நிகழ்ச்சிக்கு வந்த சல்மான் கான் இந்தி பேசும் பிரதேசங்களிலும், தமிழ்ப் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை விவரித்தவர், தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் டீசரையும் வெளியிட்டார்.

Salman Khan Praises Hero Film’s stylish features

தனது மைக்ரோ பிளாக்கில் டீசரை வெளியிட்ட சல்மான் ஹீரோ படத்தின் ஸ்டைலான அம்சங்களையும் வெகுவாகப் பாராட்டினார்.

இது குறித்து விவரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் அதிபர் கோட்டபாடி ராஜேஷ் கூறும்பொழுது, நாங்கள் எதிர்பார்த்தற்கும் மேலாக கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், படத்தின் டீசரை சல்மான் கானிடம் காட்ட வேண்டும் என்று தான் நினைத்தோம்.

டீசரைப் பார்த்து ரசித்த சல்மான் கான், தானாகவே முன் வந்து இதை நானே வெளியிடுகிறேனே என்றதுடன், டீசரில் பங்கு பெற்ற நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டறிந்தார்.

சல்மான் கான் தமிழ்த் திரையுலகம் குறித்து எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும், ஹீரோ படம் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், தான் அதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு டிசம்பர் 20 என்பது ஒரு மிக முக்கியமான தினமாகும். காரணம், நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான ஹீரோ வெளியாகும் அதே தினத்தில், நாங்கள் விநியோகம் செய்யும் தபாங் 3 படமும் வெளியாகிறது.

சிவகார்த்திகேயனுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கல்யாணி ப்ரியதர்ஷன், அபி தியோல் பிரதான வேடங்களில் நடிக்கும் ஹீரோ படத்தை இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X