பிரபல பாலிவுட் நடிகையுடன் மோதும் சல்மான் கான்.. ரம்ஜான் ரேஸில் இணைந்த ராதே.. வெல்லப்போவது யார்?

மும்பை: பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி நடித்துள்ள ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய் திரைப்படம் ரம்ஜான் போட்டியில் இணைந்துள்ளது.

Recommended Video

விஜயின் வெற்றி முக்கியம் | Genelia Vaathi coming, Indian Womens Cricket Team

வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் தலைவி திரைப்படமும் பான் இந்திய படமாக ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகிறது.

சம்மர் ரிலீஸ்

சம்மர் ரிலீஸ்

பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மக்கள் கூட்டத்தை வரவழைத்தது. அதன் பின்னர் இன்னமும் பெரிய படம் ஏதும் மக்களை வரவழைக்கும் விதமாக ரிலீஸ் ஆகவில்லை. வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் படங்களை வெகுவாக தியேட்டர்கள் நம்பி உள்ளன.

ரம்ஜான் ரிலீஸ்

ரம்ஜான் ரிலீஸ்

மார்ச் மாதம் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தேர்தல் காரணமாக ரிலீஸ் தேதியை ரம்ஜானுக்கு தள்ளிப் போட்டுள்ளது. சியான் விக்ரமின் கோப்ரா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவி

தலைவி

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள தலைவி திரைப்படமும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் மே 13ம் தேதி தான் வெளியாகிறது. இந்தி, தமிழ் என உருவாகி வரும் அந்த படம் சல்மான் கானின் ராதே படத்திற்கு பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரம்ஜானில் ராதே

ரம்ஜானில் ராதே

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி நடிப்பில் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள ராதே: தி மோஸ்ட் வான்டட் பாய் திரைப்படமும் வரும் மே 13ம் தேதி வெளியாகும் என தற்போது சல்மான் கான் போட்டுள்ள ட்வீட் பாலிவுட் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. வரும் ரம்ஜான் தினத்தன்று இந்திய சினிமாவில் மிகப்பெரிய கிளாஷ் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X