கத்ரீனாவுடன் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்!
மும்பை : 'ஏக்தா டைகர்' படத்தின் இரண்டாம் பாகமான 'டைகர் ஜிந்தா ஹே' படத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான். அலி அப்பாஸ் ஜாபர் இயக்க, சல்மான் ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார். ஆதித்யா சோப்ரா படத்தை தயாரிக்கிறார்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது டைகர் ஜிந்தா ஹே. ஆக்ஷன் படமாக இருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகளும் படத்தில் உண்டு. சல்மான் கான் ரொமான்ஸ் காட்சிகளிலும் தூள் கிளப்புவார் என்பது நாம் அறிந்ததே.

இந்தப்படத்தில் சல்மான்-கத்ரீனா இடையே முத்தக்காட்சியை இயக்குநர் வைத்தாராம். ஆனால் சல்மான் கான், அந்தக்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஏன் முத்தக் காட்சியில் சல்மான் நடிக்க மறுத்தார் என்பதுதான் பாலிவுட்டின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. வருகிற டிசம்பர் 22-ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











