சல்மான் கானுக்கு முதலில் 'தளபதி', தற்போது 'தல'
மும்பை: அஜீத் நடித்த வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானும், அவரது சகோதரர்களும் நடிப்பது உறுதியாகிவிட்டது.
பாலிவுட்டின் ரீமேக் மன்னன் என்று கூட சல்மான் கானை கூறலாம். அந்த அளவுக்கு மனிதர் ரவுண்டு கட்டி தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் நடித்து கல்லாவும் கட்டி வருகிறார். இப்படி சல்மான் ரீமேக் படங்களில் நடித்து பாக்ஸ் ஆபீஸை அதிர வைப்பதை பார்த்து தானோ என்னவோ பிற இந்தி நடிகர்களுக்கும் தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது.
இந்நிலையில் சல்மான் மீண்டும் ஒரு தென்னிந்திய பட ரீமேக்கில் நடிக்கிறார்.

வீரம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் பாசக்கார அண்ணனாக நடித்த படம் வீரம். இந்த படத்தை சிவா இந்தியில் ரீமேக் செய்கிறார்.

சல்லு பாய்
வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் அஜீத் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். அவரது தம்பிகளாக அவரின் உடன் பிறந்த சகோதரர்களான சொஹைல் கான் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

டிங்கரிங்
தமிழ் படத்தை அப்படியே இந்தியில் எடுக்காமல் வடநாட்டு ரசிகர்களுக்கு ஏற்றது போல் சில மாற்றங்களை செய்கிறாராம் சிவா.

அஜீத்
அஜீத் கௌதம் மேனன் படத்தை முடித்த பிறகு சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். அந்த படத்தை முடித்துவிட்டு தான் சிவா பாலிவுட் செல்கிறார். அவர் இயக்கவிருக்கும் முதல் இந்தி படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கிரி
விஜய் நடித்த போக்கிரி படம் இந்தியில் வாண்டட் என்ற பெயரில் ரீமேக்காகி ஹிட்டானது. அதில் விஜய் கதாபாத்திரத்தில் நடித்தது நம்ம சல்மான் தான்.

மகேஷ்பாபு
விஜய் நடித்த போக்கிரி தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி படத்தின் ரீமேக் ஆகும். அதை தான் பிரபுதேவா தமிழில் ரீமேக் செய்தார்.


Click it and Unblock the Notifications











